சென்னை: சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் இயங்கும், ஜாபர்கான்பேட்டை, உயர்நிலை பள்ளி, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், ஆறு ஆண்டுகளாக தொடர்ந்து, 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
அந்த பள்ளியை, அமைச்சர் செங்கோட்டையன், நேற்று ஆய்வு செய்தார். ஆய்வின்போது, மாநகராட்சி கல்வித்துறை துணை கமிஷனர், மகேஸ்வரி ரவிக்குமார் உடன் இருந்தார்.பின், அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது: மாநகராட்சி பள்ளிகள் சிறப்பாக செயல்படுகின்றன. 90 சதவீத பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சியை பெற, மாணவர்களை தயார் செய்து வருகின்றன. 3,000 அரசு பள்ளிகளில், விரைவில், 'ஸ்மார்ட்' வகுப்பறை அமைக்கப்படும். ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு, கணினி வாயிலாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..