கோவை மாவட்டத்தில், ஊரக திறனாய்வு தேர்வு, ஆறு மையங்களில், நேற்று நடந்தது
ஊரக பகுதிகளில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, திறனாய்வு தேர்வு, ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது
கோவை மாவட்டத்தில்,ராஜவீதி துணிவணிகர் மேல்நிலைப்பள்ளி, அசோகபுரம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உட்பட ஆறு மையங்களில், தேர்வு நேற்றுநடந்தது.இதில் பங்கேற்க, ஆயிரத்து 504 பேர் விண்ணப்பித்தனர்*
361 பேர் 'ஆப்சென்ட்' ஆகினர். மொத்தம் நுாறு மதிப்பெண்களுக்கு நடந்த இத்தேர்வை, ஆயிரத்து 143 பேர் எழுதினர்
வெற்றி பெறுவோருக்கு, பிளஸ் 2 வரைஆண்டுக்கு, 6 ஆயிரம் ரூபாய் வீதம், கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது