வாஷிங்டன்:



செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொண்ட அமெரிக்காவின் க்யூரியாசிட்டி ரோவர் விண்கலம் செயலிழந்தது.

செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் அமெரிக்கா, ரஷியா, இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. அமெரிக்கா 2011-ம் ஆண்டு அனுப்பிய க்யூரியாசிட்டி ரோவர் விண்கலம் 5 வருடங்களாக செவ்வாய் கிரக மாதிரிகளில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு தகவல்களை பூமிக்கு அனுப்பியது.

56 கோடி கி.மீ பயணம் மேற்கொண்டு 2012 ஆகஸ்ட் 6ம் தேதி செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய க்யூரியாசிட்டி தனது 23 சதவீத பணியை முடித்துள்ளது. இந்நிலையில் சில நாட்களாக விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.

இதனால் தகவல்களை பூமிக்கு அனுப்ப முடியாமல் க்யூரியாசிட்டி செயலிழந்துள்ளது. சரி செய்யும் பணியில் விஞ்ஞானிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர் என நாசா தெரிவித்துள்ளது.