ஈ.டி என்ற ஆங்கில திரைப்படத்தை யாராலும் அவ்வளவு எளிதாக மறந்திருக்க முடியாது. அந்த ஈடி ஏலியன் கவ்பாய் போல தொப்பி அணிந்துகொண்டு வால்மீன் மீது சவாரி செய்யாமல் இருந்திருக்கலாம், ஆனால் அதுபோன்று ஒன்று நிஜத்தில் நடைபெறுகிறது எனக்கூறினால் நம்புவீர்களா?
ஹார்வர்டு பல்கலைகழக வானியல் துறையின் தலைவர் போராசிரியர் எவி லோயிப், எப்படி ஏலியன்கள் விண்கற்கள் முதல் விண்வெளி குப்பைகள் வரை பயன்படுத்தி பிரபஞ்சம் முழுவதும் பயணிக்கின்றன என்பது தொடர்பான ஆய்வுமுடிவுகளை வெளியிட்டுள்ளார்." ஒரு உயிரினம் எப்படி முழு பால்வெளி அண்டம் மற்றும் அதை தாண்டியும் பயணிப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என்பதை எங்களது ஆய்வுகட்டுரை விளக்குகிறது" என்கிறார் எவி.
சூர்ய குடும்பமானது புவிஈர்ப்பு விசையுள்ள மீன்வலை போன்று செயல்படுவதாகவும், அதில் எந்நேரமும் எந்த அளவிலும் ஆயிரக்கணக்கான விண்மீன் பொருட்கள் இருப்பதாகவும் கூறும் எவி, இந்த பொருட்கள் தான் சூர்யகுடும்பத்தில் ஒரு கிரகத்தில் இருந்து மற்றொன்றிற்கு உயிரினங்களை விதைத்ததாகவும் அவர் கூறுகிறார்.
பிரபஞ்சம் முழுவதும் உயிரினங்கள் பரவியுள்ளன. அது சிறு நுண்ணுயிரியாக இருந்தாலும், ஏலியனாக இருந்தாலும், வால்மீன் அல்லது விண்கற்கள் மீது பயணம் செய்து பிரபஞ்சத்தின் ஒரு பகுதியில் இருந்து வேறிடத்திற்கு செல்கின்றன. இந்த தத்துவம் பேன்ஸ்பர்மியா என அறியப்படுகிறது.
இப்படித்தான் பூமியிலும் உயிரினங்கள் பரவியதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர். "பேன்ஸ்பர்மியா தத்துவம் என்னவெனில், பூமியில் உள்ள உயிரினங்கள் உண்மையில் பூமியை சார்த்தவை இல்லை. வேறு கிரகத்திலிருந்து இடம்பெயர்ந்து வந்தவை" அரிசோனா பல்கலைகழகத்தை சேர்ந்த ஜெய் மெலோஸ். அதன் அர்த்தம் என்னவெனில், விண்வெளிக்கு வெளியே உள்ள கிரகத்தை சேர்ந்த உயிரினம் வால்மீன் மீது பயணம் செய்து, பூமியில் தரையிறங்கி, இங்கு தற்போதுள்ள உயிரிகளுக்கான விதையை விதைத்திருக்கிறது.
ஏலியன் தொடர்பான ஆய்வுகளுக்கு எவி புதியவர் அல்ல. வேற்றுகிரவாசிகளுக்கான ஆய்வுகளுக்காகவே தனது பணி வாழ்வை அர்பணித்தவர். தற்போது 100 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஏலியன் வாழக்கையை ஆராயும் திட்டமான ப்ரேக்த்ரூ ஸ்டார்சாட் எனும் முன்னெடுப்பில் தன்னை ஈடுபடுத்தியுள்ளார்.
பல விஞ்ஞானிகளை போலவே, எவியும் பூமியில் மனிதர்களின் காலத்திற்கு முடிவு உள்ளது என நம்புபவர். கடல்களை எல்லாம் சூரியன் ஆவியாக்கும் போது நாம் புதிய இடத்தை தேடும் கட்டாயம் உள்ளது. இது தற்போதைக்கு நடக்காது. ஆனால் என்றாவது ஒருநாள் நடைபெற்றே தீரும். பூமியை போன்ற கிரகங்கள் சூர்ய குடும்பத்திற்கு வெளியே ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளது. எனவே தொலைநோக்குடன் சிந்தித்து, மாற்று திட்டத்தை தயாராக வைக்க வேண்டும்.
எனவே எவியும், ப்ரேக்த்ரூ திட்டத்தில் உள்ள மற்ற விஞ்ஞானிகளும், ஏலியன்களை தொடர்புகொள்ள முயன்று அவர்கள் உலகத்தில் வாழலாமா என கேட்கவுள்ளனர்.