விஜயதசமி விழாவினையொட்டி மாணவர் சேர்க்கை
தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் விஜயதசமி விழாவினையொட்டி புதிய மாணவர்களை மாலையிட்டு ஊர்வலமாக அழைத்து வந்து நெல்மணிகளில் அ கரம் எழுத வைத்தனர்.
விழாவிற்கு வந்தவர்களை ஆசிரியர் கருப்பையா வரவேற்றார். புதியதாக பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு மாலை அணிவித்து முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் ,பெற்றோர்களுடன் பள்ளியை அடைந்தனர்.ஆசிரியைகள் முத்துமீனாள் .செல்வமீனாள் புதிதாய் சேர்ந்த மாணவர்களை நெல்மணிகளில் "அ"கரம் எழுத வைத்து அ ,ஆ சொல்ல வைத்தனர்.எட்டாம் வகுப்பு மாணவிகள் காயத்ரி,பாக்கியலெட்சுமி,சந்தியா,நித்தியகல்யாணி ஆகியோர் புதிய மாணவர்களுக்கு திருக்குறள் வாசித்து பயற்சி அளித்தார்.மாணவர்கள் அய்யப்பன்,சபரி,கார்த்திகேயன் ஆகியோர் அபிராமி அந்தாதி சொல்ல வைத்தனர்.குழந்தைகளின் பெற்றோர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.ஆசிரியர் சோமசுந்தரம் நன்றி கூறினார்.
பட விளக்கம்: தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் புதிதாய் சேர்ந்த மாணவர்களை தேவகோட்டை முக்கிய வீதிகளின் வழியாக மாலையிட்டு பள்ளிக்கு அழைத்து வந்து பள்ளி ஆசிரியைகளால் நெல்மணிகளில் "அ"கரம் எழுத வைத்து மாணவர் சேர்க்கை கல்விக் கண் திறப்பு விழாவாக நடைபெற்றது