சென்னை: மாற்றம்... மாற்றம்... அடுத்த கல்வியாண்டு முதல் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சீருடை மாற்றம் செய்யப்படுகிறது.
அடுத்த கல்வியாண்டு முதல் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சீருடை மாற்றம் செய்யப்படும் என்று கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
ஒன்று முதல் 5ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு பச்சை நிறத்திலும், 6 முதல் 8 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பிரவுன் நிறத்திலும் சீருடை மாற்றப்படும். மாணவர்களுக்கு 4 செட் சீருடை வழங்கப்படும்.
மாணவர்களின் தரத்தை மேம்படுத்தவே பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டது. உடனுக்குடன் தேர்வு நடத்தப்படுவதால் மன அழுத்தம் ஏற்படுவதாக பெற்றோரும், மாணவர்களும் கருத்து தெரிவித்தனர்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.