உயர் ரக கேமராக்கள் தயாரிக்கும் பிரபல நிறுவனமான ரெட் நிறுவனம், கடந்த ஆண்டு ஸ்மார்ட் போன் சந்தையில் களமிறங்க போவதாகத் தெரிவித்திருந்தது.
அதன் படி சென்ற வாரம் நியூயார்க் சிட்டியில் நடைபெற்ற விழாவில் புதிய ஸ்மார்ட் போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது.
உலகின் முதல் ஹாலோகிராபிக் டிஸ்பிளே
ரெட் நிறுவனம் அறிவித்தபடி தற்போது, அந்நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போனான ரெட் ஹைட்ரஜன் ஒன் என்ற புதிய ஸ்மார்ட் போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. உலகின் முதல் ஹாலோகிராபிக் டிஸ்பிளேயுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ள சூப்பர் ஹலோகிராபிக் ஸ்மார்ட் போன் இது என்பது குறிப்பிடத்தக்கது.

3டி கண்ணாடிகள் இல்லாமலே ஹலோகிராபிக் .
சென்ற வாரம் நியூயார்க் சிட்டியில் நடைபெற்ற விழாவில், இந்த புது ஸ்மார்ட் போன்னின் முழு விபரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. ரெட் ஹைட்ரஜன் ஒன் ஸ்மார்ட் போன் 5.1' இன்ச் QHD 4வியூ லைட் பீல்டு டிஸ்ப்ளேயுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 3டி கண்ணாடிகள் இல்லாமலே ஹலோகிராபிக் அனுபவத்தைப் பயனர்கள் பெற முடியுமென்று ரெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நானோ தொழில்நுட்பம்
பிரத்தியேக நானோ தொழில்நுட்பத்தின் மூலம் இந்த ஸ்மார்ட் போன் இல் சிறந்த தெளிவான நிறங்களை மிக துல்லியமாக 4டி கோணத்தில் பிரதிபலிக்கும் டிஸ்பிளே திரையுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக ரெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரெட் ஹைட்ரஜன் ஒன் சிறப்பம்சங்கள்:
- 5.7' இன்ச் உடன் கூடிய 2560x1440 பிக்சல் கொண்ட குவாட் எச்.டி. / எல்.டி.பி.எஸ் - டி.எப்.டி டிஸ்பிளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
- ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 835 பிராசஸர்
- அட்ரினோ 540 GPU
- 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு அலுமினியம்
- 6 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு டைட்டானியம்
- 12 மெகா பிக்சல் டூயல் ஸ்டீரியோ பிரைமரி கேமரா
- 8 மெகா பிக்சல் டூயல் ஸ்டீரியோ முன்பக்க கேமரா
- ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
- பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 4ஜி வோல்ட்இ
- வைப்பை
- ப்ளூடூத்
- ஜி.பி.எஸ்.
- 4500 எம்.ஏ.எச் பேட்டரி

விலை
விலை : அலுமினியம் வேரியண்ட் ரூ.87,550
டைட்டானியம் வேரியண்ட் ரூ.1,16,770

source: gizbot.com
Dailyhunt


whats app group1


whats app group 2