சேலம் மாவட்டம்,காடையாம்பட்டி, கே.மோரூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், 605 மாணவ - மாணவியர்

படிக்கின்றனர். செப்., 28ல், அங்கு தலைமையாசிரியராக பணிபுரிந்த சங்கமித்திரை, வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.தொடர்ந்து, கே.மோரூரைச் சேர்ந்த, சமூக அறிவியல் ஆசிரியர் கோவிந்தன், 53, நேற்று முன்தினம், அயோத்தியாப்பட்டணம் அருகே, ஆச்சாங்குட்டப்பட்டி அரசு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று காலை, பள்ளி நுழைவாயில் முன், மாணவ - மாணவியர், வகுப்பறைக்கு செல்லாமல், தர்ணாவில் ஈடுபட்டனர். ஆசிரியருக்கு ஆதரவாக, சில பெற்றோர் பங்கேற்றனர். தீவட்டிப்பட்டி போலீசார், பேச்சு நடத்தி, சமாதானப்படுத்தியதால், மாணவர்கள் வகுப்புக்கு சென்றனர்

whats app group1

whats app group 2

whats app group 3