அணுக்கள் அல்லது மூலக்கூறுகளுக்கிடையேகவர்ச்சி விசையினாலுண்டாகும் பிணைப்பை வேண்டர் வால் (Vander Wall 's) பிணைப்பு என்பர்.

பிஸ்கட்டைப் பொறுத்த வரையில் அதன் துகள்களுக்கிடையே (particles) நிலவும் மேற்கூறிய அப்பிணைப்பு வலிமை குன்றியதாக உள்ளது. இதனால் பிஸ்கட் மென்மையாக இருப்பதுடன் எளிதில் தூளாகியும் விடுகிறது. அடுத்து பிஸ்கட் தண்ணீரை எளிதில் உறிஞ்சி விடுவதைக் காணலாம்.

இதற்குக் காரணம் அதன் துகள்களுக்கிடையேயுள்ள வேண்டர் வால் பிணைப்பு தண்ணீரின் தொடர்பால் சிதைக்கப்பெற்று மிகவும் மிருதுத் தன்மை அடைந்துவிடுவதேயாகும்.பாலைப் பொறுத்தவரை, அது தண்ணீர் மற்றும் பாகுத்தன்மை (viscous) கொண்ட புரதம், கொழுப்பு ஆகியவற்றின் கலவையாகும். பிஸ்கட்டைப் பாலில் தோய்த்தவுடன், அதிலுள்ள தண்ணீர் ஏற்கனவே குறிப்பிட்டவாறு பிஸ்கட் துகள்களுடன் வினைபுரிந்து பிஸ்கட்டை மிருதுத்தன்மை அடையச்செய்துவிடும். மேலும் சூடான பாலில் புரதம் கொழுப்பு ஆகியவற்றின் பாகுத்தன்மை மிகவும் குறைந்து போய்விடுகிறது. பிஸ்கட் சூடானஅந்நிலையில் சூடான பால்மிகவும் விரைந்து பிஸ்கட் துகள்களுக்கிடையே பரவுகிறது. இதன் காரணமாக பாலை விரைந்து உறிஞ்சிக்கொள்கிறது.

இவ்விரைவுத்தன்மை ஆறிய பாலில் இல்லாமல் இருப்பதற்குக் காரணம் அதிலுள்ள பாகுத்தன்மை குறைவின்றி இயல்பு நிலையில் இருப்பதேயாகும்


whats app group1


whats app group 2