பதவி உயர்வு அடிப்படையில் நிரப்ப வேண்டிய, மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு விரைவில், கலந்தாய்வு நடத்த வேண்டுமென்ற,
கோரிக்கை வலுத்துள்ளது.புதிய நிர்வாக சீர்த்திருத்த நடவடிக்கைகளால், மாவட்ட கல்வி அலுவலகங்களின் எண்ணிக்கை, 119 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக ஏற்படுத்தப்பட்ட கல்வி அலுவலகங்களுக்கு, பிரத்யேக அலுவலகம் இல்லை.
அரசுப்பள்ளி வளாகத்திற்குள் கல்வி அலுவலகம் செயல்படுவதோடு, அலுவலக பணியாளர் காலியிடங்கள், நிரப்ப வேண்டுமென்ற, நீண்டநாள் கோரிக்கை நிலுவையில் உள்ளது. இதோடு, 50 கல்வி மாவட்டங்களுக்கான அதிகாரி பணியிடங்கள், பொறுப்பு அலுவலர் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், இப்பதவியை கூடுதலாக பொறுப்பேற்றுள்ளதால், பள்ளிகளில் பணிகள் பாதிக்கப்படுகின்றன. பொறுப்பு அதிகாரிகளால், 'சீனியாரிட்டி' அடிப்படையில் வேறு பணியிடங்களுக்கு, செல்வதிலும் சிக்கல் உள்ளது. எனவே இப்பணியிடங்களுக்கு, நிரந்தர அலுவலர் நியமிக்க வேண்டுமென்ற, கோரிக்கை வலுத்துள்ளது.
தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநில ஆலோசகர் பாலகிருஷ்ணன் கூறுகையில்,''தமிழகத்தில், 50 கல்வி அதிகாரி பணியிடங்கள் காலியாக உள்ளன. ''பதவி உயர்வு அடிப்படையில், டி.இ.ஓ.,வாக நியமிக்கப்படுவோர், ஓராண்டுக்கு பின், முதன்மை கல்வி அலுவலராகவும், பொறுப்பேற்க இயலும். பொறுப்பு அதிகாரிகள் நியமித்துள்ளதால், சீனியாரிட்டி பட்டியலில் உள்ளவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இப்பணியிடங்களில் நிரந்தர அலுவலர் நியமிக்க கலந்தாய்வு நடத்த வேண்டும்,'' என்றார்