புதுடில்லி:பிரதமர் மோடிதலைமையிலான மத்தியஅரசு, பணமதிப்பு நீக்கம்,ஜி.எஸ்.டி., அறிமுகத்தைதொடர்ந்து, அடுத்தஅதிரடியாக, வருமான வரிசட்டத்தில், சீர்திருத்தம் செய்யதயாராகி வருகிறது.
அதன்படி, 1961ம் ஆண்டு,வருமான வரிச் சட்டத்திற்குபதிலாக, தற்போதையபொருளாதார சூழலுக்கும்,தேவைக்கும் ஏற்ப, புதியவருமான வரிச் சட்டம்அறிமுகமாகஉள்ளது.இதற்காக, ஏற்கனவே,அரவிந்த் மோடி தலைமையில்,செயல் திட்டக் குழுஅமைக்கப்பட்டு உள்ளது.இக்குழு, புதிய வருமான வரிசட்ட வரைவறிக்கையைதயாரிக்கும் பணியைமேற்கொண்டு வந்தது.
இப்பணி முடிவடையாதநிலையில், கடந்தசெப்டம்பரில், அரவிந்த் மோடிஓய்வு பெற்றார்.
புதிய தலைவர்
இதையடுத்து, மத்திய அரசு,புதிய வருமான வரி சட்டவரைவறிக்கை தயாரிக்கும்குழு தொடர்பாக, ஏற்கனவேபிறப்பித்த உத்தரவில் மாற்றம்செய்துள்ளது.இது குறித்து,மத்திய நிதியமைச்சகம்வெளியிட்டுள்ள அறிக்கை:
மத்திய நேரடி வரிகள் வாரியஉறுப்பினர், அகிலேஷ் ரஞ்சன்,புதிய வருமான வரி சட்டவரைவறிக்கைதயாரிப்பதற்காக அமைக்கப்பட்டு உள்ள செயல் திட்டக்குழுவின் தலைவராகநியமிக்கப்பட்டு உள்ளார்.மற்றபடி, குழு உறுப்பினர்களில் எந்தமாற்றமும்செய்யப்படவில்லை.
செயல் திட்டக் குழு, 57ஆண்டுகள் பழமையானவருமான வரிச் சட்டத்திற்குமாற்றாக, புதிய வருமானவரிச் சட்ட வரைவறிக்கைதயாரித்து, 2019, பிப்., 28க்குள்,அமைச்சகத்திற்கு வழங்கும்.
இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.வரிசெலுத்து வோருக்கும்,தொழில் நிறுவனங்களுக்கும்பயனளிக்கும் வகையில், புதியவருமான வரி சட்டவரைவறிக்கை இருக்கும் என,எதிர்பார்க்கப் படுகிறது.
பயன்கள்
இது குறித்து, மத்திய அரசுஅதிகாரி ஒருவர்கூறியதாவது:பல நாடுகளில்,வருமான வரி விகிதம்குறைவாக உள்ளது. வரிவிலக்கு சலுகைகள் எதுவும்வழங்கப்படுவதில்லை.இதேகொள்கையை மத்திய அரசுபின்பற்றும் என,எதிர்பார்க்கப்படுகிறது.இதனால், வருமானவரிசெலுத்தும் ஏராளமானோர்பயன் பெறுவர். தாமாகமுன்வந்து வருமான வரிசெலுத்துவோர் எண்ணிக்கைஅதிகரிக்கும்.
தற்போது, தனிநபருக்கான,வருமான வரி விலக்கு வரம்பு, 2.50 லட்சம் ரூபாயாக உள்ளது.இதை, 5 லட்சம் ரூபாயாகஉயர்த்துவது குறித்து, செயல்திட்டக் குழுபரிசீலிக்கும்.வருமான வரிவிகிதம்
, 10 - -30 சதவீதத்தில் இருந்து, 5 - - 20 சதவீத மாககுறைக்கப்படும் என,தெரிகிறது.வெளி நாடுகளைபின்பற்றி, நாட்டின்பொருளாதார தேவையைகருத்தில் கொண்டு, சிறந்தவரி நடைமுறைகள்அறிமுகப்படுத்தப்படும்.
அமெரிக்க அதிபர் டொனால்டுடிரம்ப், முதலீடு களைஈர்க்கவும், வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும், 'கார்ப்பரேட்' நிறுவனங்களுக்கான வரியை குறைத்து,வெற்றி கண்டு உள்ளார். இதேபாணியை, மத்திய அரசு பின்பற்றும் என,எதிர்பார்க்கப்படுகிறதுஇவ்வாறு அவர் கூறினார்.
வரி குறையும்
கார்ப்பரேட் நிறுவனங்கள்வரியை, 30 சதவீதத்தில்இருந்து, 25 சதவீதமாககுறைக்க, மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.ஏற்கனவே,ஆண்டுக்கு, 250 கோடி ரூபாய்விற்றுமுதல் உள்ளநிறுவனங்களுக்கான வரி, 25சதவீதமாககுறைக்கப்பட்டுள்ளது.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..