தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை
அரசுப்பள்ளி மாணவர்களின் கல்வித்திறன் மேம்பாட்டிற்காக எடுத்து வரும் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, ஆசிரியர்களுக்கும் அலுவலர்களுக்கும் ஒரு இணைப்பு பாலமாகவும், ஆசிரியர்கள் தங்கள் திறனை வெளிக்கொணரவும், மேம்படுத்திக்கொள்ளவும் ஏதுவாக இந்தியாவிலேயே முன்மாதிரியாக Workplace எனும் இணையவழி பயன்பாட்டை அறிமுகப்படுத்துகிறது.
முதற்கட்டமாக திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் சோதனை முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு, தற்பொழுது மாநிலம் முழுவதுமுள்ள மூன்று இலட்சம் ஆசிரியர்களுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது.
இதன் மூலமாக ஆசிரியர்கள் தங்களின் சிறந்த கல்வி உத்திகளையும், தொழில்நுட்ப பயன்பாடுகளையும் சக ஆசிரியர்களிடம் பகிர்ந்துகொள்ளவும், தங்களை மேலும் மேம்படுத்திக்கொள்ளவும் முடியும்.
workplace அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் இடையே நேரடியான தகவல் தொடர்புக்கு வழிசெய்யும்.
பள்ளிக்கல்வித்துறையின் மாநிலக் கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலமாக சிறந்த பாட வல்லுநர்களைக் கொண்டு இணைய வழியாக நேரலையில் புதிய பாடத்திட்டத்திற்கான கற்பித்தல் செயல்பாடுகளை போதிக்கவும், நேரலையில் வகுப்பெடுக்கவும், இணைய வானொலி நிகழ்ச்சிகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் அவற்றை எந்த நேரத்திலும் தரவிறக்கம் செய்து பயன்படுத்த ஏதுவாக அவை நேரலைக்குப் பிறகும் Cloud storage ல் சேமிக்க வழிசெய்யப்பட்டுள்ளது.
மேலும் ஆசிரியர்கள் தாங்களே உருவாக்கிய மின் பாடப்பொருள்களை அனைத்து ஆசிரியர்களுக்கும் பகிர்ந்து கொள்ளவும், அவை குறித்த ஆரோக்கியமான விவாதத்திற்கும் ஒரு தளமாக இந்த Workplace விளங்கும்.
சிறப்பாக செயல்படும் ஆசிரியர்கள், சிறந்த பள்ளிகளை அலுவலர்கள் கண்டறிந்து பாராட்டவும் இத்தளம் வழிசெய்யும்.
இத்தளத்தின் மூலமாக ஆசிரியர்கள் மின் பாடப்பொருள் தயாரிப்பு , போட்டித்தேர்வுகளுக்கான வினாக்கள் தயாரிப்பு ஆகியவற்றில் நேரடியாக தங்களின் பங்களிப்பை அளிக்க முடியும்.
மாநில அளவில் பயன்படுத்தப்பட்டு வரும் வீடியோ கான்பரன்ஸ் வசதிகளை Workplace மூலமாக மாவட்ட, கல்வி மாவட்ட, வட்டார அலுவலர்கள் பயன்படுத்தவும் வகை செய்யப்பட்டு உள்ளது.
இதற்கேற்றவாறு Cloud storage, 46 மொழிகளில் மொழிபெயர்பு வசதிகள், தகவல் பாதுகாப்பு வசதிகள், கைபேசி செயலி, குழுக்கள் உருவாக்கும் வசதி ஆகியவை இத்தளத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
Workplace ன் சிறப்பம்சங்கள்:
⚡அளவற்ற பயனாளிகள்,
*⚡அளவற்ற கோப்புகளை சேமிக்க Cloud space,*
*⚡வீடியோ கான்பரன்ஸ் வசதி,*
*⚡படங்கள், ஒலி/ஒளி கோப்புகளை பகிர்ந்துகொள்ளும் வசதி,*
*⚡வரிசைமுறை விளக்கப்படம்,*
*⚡மொழிபெயர்ப்பு வசதிகள்,*
*⚡நேரலை ஒளிபரப்பு வசதி,*
*⚡Android/ IOS செயலி.*