அனைத்து பட்டப் படிப்புகளுக்கும், ஜனவரி, 15 வரை மாணவர் சேர்க்கை நடக்கும்' என, இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலையான, 'இக்னோ' அறிவித்துள்ளது.இது குறித்து, இக்னோவின் சென்னை மண்டல இயக்குனர், கிஷோர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:இக்னோவால் நடத்தப்படும், பட்டப் படிப்புகள், முதுநிலை படிப்புகள், டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகள், சிறப்பு பி.காம்., - எம்.காம்., உள்ளிட்ட படிப்புகளுக்கு, பல்கலைக்கழக மானியக் குழுவின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்த அனுமதி, 2023 வரை வழங்கப்பட்டுள்ளது.எனவே, இக்னோவில், அனைத்து வகை படிப்புகளுக்கும், நடப்பு கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கை, ஜன., 15 வரை நடக்கும்.விண்ணப்பங்களை, https://onlineadmission.ignou.ac.in என்ற, இணையதளத்தில் சமர்ப்பிக்கலாம். கூடுதல் விபரங்களுக்கு, rcchennai@ignou.ac.in என்ற, 'இ - மெயில்' முகவரி, 044 - -2661 8438, 2661 8039 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுஉள்ளது.