டில்லி:

போலி நம்பர் பிளேட்கள் மூலம் வாகனங்கள் இயக்கப்படுவதை தடுக்கும் நோக்கில், அடுத்த ஆண்டு (2019) ஏப்ரல் 1ந்தேதி முதல் வாகனங்களுக்கு பாதுகாப்பு வசதியுடன் கூடிய புது வகை நம்பர் பிளேட் பொருத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

பாராளுமன்ற மக்களவையில், போலி நம்பர் பிளேட் விவகாரம் குறித்து உறுப்பினரின் கேள்விக்கு பதில் அளித்த மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி இந்த தகவலை தெரிவித்து உள்ளார்.


அதன்படி, ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அனைத்து வாகனங்களிலும் குரோமியம் பூசப்பட்ட நம்பர் பிளேட்டில் ஹாலோகிராம் ஸ்டிக்கர்கள் ஒட்டப்படும் என்றும், அத்துடன் வாகனத்தின் எண் லேசர் ஒளிக்கற்றை மூலம் பொறிக்கப்பட இருப்பதாகவும் கூறினார். வாகனத்தின் வாகனத்தின் முன்பக்கம் மற்றும் பின்பிக்கம் ஆகிய இருபுறங்களில் அமைக்கப்படும் நம்பர் பிளேட்டுளும் ஒரே மாதிரியாகவே இருக்கும் என்றும் தெரிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2019 ஏப்ரல் 1-ஆம் நாள் முதல், வாகன உற்பத்தியாளர்கள், டீலர்கள் தாங்கள் விற்பனை செய்யும் வாகனங்களில் உயர் பாதுகாப்பு அம்சம் கொண்ட நம்பர் பிளேட்டுகள் பொருத்தி டீலர்களுக்கும், வாடிக்கையாளர் களுக்கும் விற்பனை செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

உயர் பாதுகாப்பு அம்சம் கொண்ட நம்பர் பிளேட்டானது வாகனத்திலிருந்து அகற்ற முடியாததாக வும், மறுமுறை வேறு எவராலும் பயன்படுத்த முடியாத வகையிலும், வாகனத்துடனே பொருத்தும் வகையில் அமைக்கப்படும்.

ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் பழைய வாகனங்களுக்கும் இந்த உயர் பாதுகாப்பு அம்சம் கொண்ட நம்பர் பிளேட்டை பொருத்தலாம். ஆனால், நம்பர் பிளேட் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் மாநில அரசின் அங்கீகாரத்தை பெற்றிருத்தல் அவசியம் ஆகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

2019 ஏப்ரல், High security, laser printed, Nitin Gadgari, parliment, registration plates, உயர் பாதுகாப்பு நம்பர்பிளேட், புது வகை நம்பர் பிளேட்!, மத்தியஅரசு முடிவு, லேசர் பூசப்பட்ட நம்பர் பிளேட்

Whats App Group link