புதுக்கோட்டை,டிச.2:திட்டமிட்டபடி ஜாக்டோ ஜியோ உறுப்பினர்கள் டிசம்பர் 4 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் பங்கேற்பார்கள் என ஜாக்டோ ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூறினர்..
புதுக்கோட்டை திலகர் திடல் அருகே சந்தைப்பேட்டை நகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்களின் ஆயத்தக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூறியதாவது:ஜாக்டோ ஜியோ உறுப்பினர்கள் அனைவரும் புதுக்கோட்டை மாவட்டத்தில் டிசம்பர் 4 முதல் நடைபெறும் போராட்டத்தில் முழுமையாக பங்கேற்பார்கள்..ஜாக்டோ ஜியோ உறுப்பினர்கள் போராட்டம் குறித்து வட்டார அளவில் பிராச்சாரம் மேற்கொள்வார்கள்.. போராட்ட நாட்களில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு சங்கங்களின் சார்பாக ஒவ்வொரு சங்கத்திலிருந்தும் 10 ஆசிரியர்கள்,அரசு ஊழியர்கள்,அரசுப் பணியாளர்கள் நிவாரணப்பணிகளில் ஈடுபட உள்ளனர் என்றார்கள்..
ஆயத்தக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ரெங்கசாமி,செல்வராஜ்,ராஜாங்கம்,கண்ணன்,செல்லத்துரை,புகழேந்தி ஆகியோர் செய்திருந்தனர்.
கூட்டத்தின் சிறப்பு அழைப்பாளர்களாக மன்றம் சண்முகம்நாதன்,ஜபருல்லா ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர்..
கூட்டத்தில் மாநில,மாவட்ட ஒன்றிய பொறுப்பில் உள்ள ஆசிரியர்கள்,அரசு ஊழியர்கள்,அரசுப் பணியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்..