ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு
முழுவதிலும் உள்ள வங்கி ஊழியர்கள் வரும் 21ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக, அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.




நாடு முழுவதிலும் உள்ள வங்கி ஊழியர்கள் தங்களது ஊதியத்தை உயர்த்தவும், மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், ஐந்து நாட்கள், அதாவது டிசம்பர் 21ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. 26ஆம் தேதி இது தொடருமா என்பது பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.

வேலை நிறுத்தம் காரணமாக, ஏடிஎம் சேவை முடங்கும் அபாயமும் உள்ளதால், வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான பணத்தை முன்கூட்டியே எடுத்து வைத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Whats App Group link