சென்னை:
'சம வேலைக்கு சம ஊதியம்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 24-ந் தேதி முதல் உண்ணாவிரத போராட்டம் நடத்தில் வருகின்றனர். அரசு கோரிக்கையை நிறைவேற்றும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்ற உறுதியுடன் வெயிலையும், பனியையும் பொருட்படுத்தாமல் இன்று 6-வது நாளாக போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
உண்ணாவிரதப் போராட்டத்தால், உடல் நலம் பாதிக்கப்பட்ட 200-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அரசு தரப்பில் இதுவரை ஆசிரியர்களுக்கு சாதகமான பதில் வராததால் சாகும் வரை தங்களின் உண்ணாவிரத போராட்டத்தை தொடரப்போவதாக இடைநிலை ஆசிரியர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Whats App Group link