டில்லி

சி பி எஸ் இ 12 ஆம் வகுப்புக்கான தேர்வுத் தேதிகளில் மாற்றம் செய்துள்ளது.


சி பி எஸ் இ 12 ஆம் வகுப்பு தேர்வுகள் வரும் மார்ச் மாதம் 28 முதல் தொடங்க இருந்தன. அந்த தேதிகளில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த மாற்றத்தின்படி தேர்வுகள் மார்ச் 28 க்கு பதில் ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மார்ச் 28 ஆம் தேதி நடக்க இருந்த தேர்வுகள் ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதி நடைபெறும். மற்றும் ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதி நடைபெற உள்ள தேர்வுகள் ஏப்ரல் மாதம் 4 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளன.

கம்பியூட்டர் சயின்ஸ் மற்றும் தகவல் பரிமாற்றம் ஆகீய தேர்வுகள் மார்ச் மாதம் 28 ஆம் தேதிக்கு பதில் ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதி நடைபெற உள்ளன. அத்துடன் ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த தத்துவப் பாட தேர்வு உள்ளிட்ட தேர்வுகள் ஏப்ரல் நான்காம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஏப்ரல் 4 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட தேர்வுகளில் எந்த மாற்றமும் கிடையாது.

12 ஆம் வகுப்பு தேர்வு, CBSE, Class 12 exam, Dates changed, சி.பி.எஸ்.இ., தேதி மாற்றம்

Whats App Group link