இன்று திருச்சியில் நடைபெற்ற *மாநில அளவிலான மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்* கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவுகள் இறுதி செய்யப்பட்டது._


*வரும் 22/1/2019 அன்று முதல் நடைபெறவிருக்கும் அரசு ஊழியர்கள் & ஆசிரியர்களின் போராட்டத்தில் நமது 2009 & TET போராட்ட குழுவின் சார்பாக பள்ளியை புறக்கணிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து ஒவ்வொரு போராட்டத்தின் போதும் ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி கோரிக்கையினை செவிமடுக்காமல் புறக்கணிப்பதால் பள்ளி வேலை நாட்களிலும் நாம் இந்த போராட்டத்தை கையில் எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு அரசு நம்மை தள்ளியுள்ளது. நாம் மாணவர்கள் நலன் கருதி இதுவரை விடுமுறை நாட்களில் மட்டுமே போராட்டங்களை நடத்தி வந்துள்ளோம், ஆனாலும் அரசு செவிமடுக்காத காரணத்தினால் ஆசிரியர்கள் & அரசு ஊழியர்களின் ஒற்றுமையை நிலைநிறுத்தும் விதமாகவும் இப்போராட்டத்திற்கு ஆதரவளிக்கிறோம்.*

Whats App Group link