சென்னை:மத்திய அரசு ஊழியர் தொழிற்சங்கங்கள் வரும் 8, 9 தேதிகளில் நடத்துவதாக அறிவித்துள்ள நாடுதழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் தமிழக அரசு ஊழியர்கள் பங்கேற்றால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.
12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர் தொழிற் சங்கங்கள் வரும் 8,9 தேதிகளில் நாடுதழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றன. தமிழகத்தில் அரசு ஊழியர்கள் சங்கம், போக்குவரத்து, மின்வாரி யம் உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த சங்கங்கள் போராட்டத்துக்கு ஆதரவு அளித்துள்ளன. இதனால் அரசுப்பணி கள் முடங்கி, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் சூழல் காணப்படுகிறது.
இந்நிலையில், இந்தப் போராட் டத்தில் தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈடுபட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து கூடுதல் தலைமை செயலாளர்கள், அரசுத் துறைகளின் செயலாளர்கள், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
அங்கீகரிக்கப்படாத சங்கத்தின் சார்பில் ஊழியர்கள் வரும் 8, 9 தேதிகளில் நடத்த உள்ள வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு அளித்து தமிழகத்திலும் போராட்டம் நடத் தப்பட உள்ளதாக தகவல் கிடைத் துள்ளது. அவ்வாறு போராட்டம் நடத்தி அரசு நிர்வாகத்தை பாதித் தால் அது விதிமுறை மீறிய செயல்.
எனவே, விதிகளை மீறும் ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். வேலை நிறுத்த நாட்களில் விடுப்பு எடுக்கக் கூடாது. அன்று பணிக்கு வந்தவர்கள், வராதவர்கள் பட்டியல் அன்றைய தினம் காலை 10.30 மணிக்குள் பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறைக்கு அனுப்பப்பட வேண்டும்.
வேலை நிறுத்த நாட்களில் விடுப்பு எடுத்தால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும். வேலைநிறுத்தத்தில் பங்கேற்கும் ஒப்பந்தப் பணியாளர்கள், பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்று அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
source:
oneindia.com
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..