*ஊடகவியலாளரின் கவனத்திற்கு*                                இன்றைய பள்ளி கல்வித்துறை
அமைச்சரின் பேட்டியின் போது        ஊடகவியலாளர்கள் வினாக்கள் எஸ்மா டெஸ்மா ஆகிய சட்டங்களை பயன்படுத்துவீர்களா என்பதை மீண்டும் மீண்டும் கேட்டனர். ஊடகவியலாளர்கள்  சங்கங்கள் ஏன் போராடுகின்றன? போராடுவதற்கு முன்கூட்டியே தகவல்கள் தெரிவித்துள்ளனவா? கோரிக்கைகளில் உள்ள செய்திகளை அமைச்சரிடமிருந்து பதிலாக பெறுவதற்கு பதிலாக அரசு ஊழியர்களையும் ஆசிரியர்களையும் அச்சுறுத்தும் விதமாக  எஸ்மா டெஸ்மா குறித்து வினாக்கள் தொடுத்து ஊடகத்திற்கு அறநெறி தானா? வீதியில் நின்று போராடும் அளவுக்கு கடைசிகட்ட நிலைக்குத் தான் தள்ளப்பட்டுள்ளனர்.  பல்வேறு கட்ட போராட்டங்களை முடித்த பின்புதான் இந்த நிலைக்கு வந்துள்ளனர். ஊடகவியலாளர்கள் அரசு அமைத்த கமிட்டி குறித்தும் அவை பரிந்துரை செய்த செய்திகள் என்ன? என்பதையும் பள்ளிக்கல்வி அமைச்சரிடம் கேட்டு வெளியிட முற்பட வேண்டும். அதை விடுத்து அச்சுறுத்தும் போக்கில் செய்தியாளர்கள் பயணப்படுவது அறநெறி ஆகாது.