"காணும்பொங்கல்"-நெப்போலியன்
😀😀😀😀😀😀😀
மனிதர்_பொங்கல் சிறந்து..!!

மாட்டுப்பொங்கல் நிறைந்து..!!
மனிதம்-பொங்கல்
மலர்ந்தது...!!
இது-உறவுகளைக்
'காணும்'பொங்கல்.!!
நண்பர்கள் நட்புதனை....
'பேணும்'பொங்கல்...!!
முறைமாமன்...
முறைப்பெண்கள்..
நல்லன்பில்....
'நாணும்'பொங்கல்...!!
மஞ்சள்நீர் முகத்தில்..
'பூணும்'பொங்கல்..!!
மனிதம் மலர ஓர்பொங்கல் வைத்த...நம் தமிழ்முன்னோர்....!!
என்னோர்.......??
"வினை"விதைப்போர் விலக்கி வைத்தல்..
வீரம் என்போம்...!!
நமைத்தவிர்ப்போர்...
தவிர்த்து வைத்தல்...
"தீரம்"என்போம்...!!
தமிழர் குணம்....
துளிர்க்கவைத்தல்...
"சாரம்"என்போம்...!!
தற்பெருமை பேசுவதை....
"பாரம்"என்போம்...!!
தீய எண்ணம்....
தமிழருக்கு "தூரம்'
என்போம்...!!
இளகு மனதில்...
எல்லோரும் தமிழருக்கு.."ஓரம்"..
என்போம்...!!
"புலனம்"-இணைத்தாலும்...!!
"முகநூல்"-பிணைத்தாலும்..!!
அவ்வப்போது...
சந்திப்பதும்..,
சிற்றுண்டியில்...
'பந்தி'ப்பதும்...!!
இரத்த சுழலை..
சீராக்கும்...!!
இதய ஓசையை...
கூராக்கும்...!!
மூளை நரம்புகளை...
வேராக்கும்...!!
மனிதம் பேசுவோம்..!!
புனிதம் பூசுவோம்..!!
வாழ்க "'காணும்"
பொங்கல்....!!

      நெப்போலியன்
           ஆசிரியர்

Whats App Group link