இன்டெல் நிறுவனம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியானது. ஏற்கனவே சாம்சங், ஹூவாய், எல்.ஜி., சியோமி என பல்வேறு நிறுவனங்களும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருகின்றன.
சர்வதேச காப்புரிமை அலுவலகம் மற்றும் அமெரிக்க காப்புரிமை மற்றும் டிரேட்மார்க் அலுவலகத்தில் இன்டெல் பதிவு செய்திருக்கும் விண்ணப்பத்தில் இன்டெல் ஸ்மார்ட்போனின் விவரங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த ஸ்மார்ட்போன் திறக்கப்பட்ட நிலையில் பெரிய திரை கொண்ட டேப்லெட் போன்று காட்சியளிக்கிறது. இன்டெல் புதிய சாதனத்தில் மொத்தம் மூன்று டிஸ்ப்ளேக்கள் இடம்பெற்றுள்ளன.
இன்டெல் காப்புரிமை விண்ணப்பத்தின் தலைப்பு மடிக்கக்கூடிய டிஸ்ப்ளே பேனல்கள் கொண்ட மின்சாதம் என வைக்கப்பட்டிருக்கும் காப்புரிமை விவரங்களின் படி முழுமையாக மடிக்கப்பட்ட நிலையில், இந்த சாதனத்தை ஸ்மார்ட்போன் போன்று பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்படுள்ளது
இந்த சாதனத்தில் ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, சுற்றிலும் பெசல்கள் இல்லாமல், கேமரா, சென்சார்கள் மற்றும் ரிசீவர்கள் டிஸ்ப்ளேவின் கீழ் பொருத்தப்படுகிறது.ஸ்மார்ட்போனினை இருமுறை திறந்தால், பெரிய டேப்லெட் போன்று பயன்படுத்தலாம். இருமுறை மடிக்கக்கூடிய வகையில் உருவாவதால் இந்த ஸ்மார்ட்போன் அதிக தடிமனாக இருக்கும் என தெரிகிறது.
டேப்லெட் சாதனம் திறக்கப்பட்ட நிலையில் மூன்று டிஸ்ப்ளே பாகங்களை கொண்டுள்ளது. ஒவ்வொரு பகுதியிலும் இரண்டு கேமராக்கள் என மொத்தம் ஆறு கேமராக்கள் வழங்கப்படுகிறது. இந்த சாதனத்துடன் ஸ்டைலஸ் பென் ஒன்றும் வழங்கப்படுகிறது. இதனை மடிக்கக்கூடிய சாதனத்துடன் காந்தம் போன்று இணைத்து கொள்ளலாம்.

Whats App Group link