பள்ளிகளில் தினமும் திருக்குறள், நீதிக்கதைகளுடன் மாணவர்களுக்கு
இதுபோல் பள்ளிகளில் காலை வழிபாட்டில் பல்வேறு விதிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டது. ஆனால், ஒரு சில பள்ளிகளில் நல்லொழுக்கங்களை வளர்ப்பதற்கான நடவடிக்கைகள் முடங்கி வருவதாக புகார்கள் எழுந்துள்ளது. எனவே, பள்ளிகளில் காலை பிரார்த்தனை கூட்டத்தை முறையாக நடத்தாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கல்வி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட கல்வி அதிகாரிகள் கூறுகையில், ‘பள்ளிகளில் வகுப்புகள் தொடங்குவதற்கு முன்பு 25 நிமிடங்கள் காலை வழிபாடு நடத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் விளக்கவுரையுடன் திருக்குறளை வாசிக்கவேண்டும். மாணவர்கள் கதைகளை விரும்பி கேட்பார்கள் என்பதால், ஒரு நீதிக்கதை சொல்ல வேண்டும்.
மாணவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பது, இன்றைய சிந்தனை, பொது அறிவு, செய்தி வாசித்தல், தியானம் என ெமாத்தம் 12 நிகழ்ச்சிகளுக்கு 25 நிமிடங்களை பிரித்து பட்டியலிடப்பட்டுள்ளது. ஆனால் ஒரு சில பள்ளிகளில் அட்டவணையில் உள்ளவற்றை முறையாக பின்பற்றுவது கிடையாது என்று புகார்கள் வந்துள்ளது. எனவே, பள்ளிகளில் காலை வழிபாட்டினை தலைமை ஆசியர்கள் கட்டாயம் செயல்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்றனர்.
பயோமெட்ரிக் கருவி
காலை வழிபாட்டிற்காக ஆசிரியர்களும் குறிப்பிட்ட நேரத்துக்கு பள்ளிக்கு வந்திருக்க வேண்டும். ஆனால், ஒரு சில ஆசிரியர்கள் பள்ளிக்கு தாமதமாக வருவதாக புகார்கள் நீடித்து வருகிறது. எனவே, ஆசிரியர்களின் வருகையை கண்காணிக்க பள்ளிகளில் பயோமெட்ரிக் கருவிகள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஜனவரி 12ம் தேதிக்குள் பள்ளிகளில் பயோ மெட்ரிக் கருவிகள் பொருத்த வேண்டும் என்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், ஓரிரு நாட்களில் பயோ மெட்ரிக் கருவிகள் பொருத்தப்படும் என்றும், விடுபட்ட பள்ளிகளில் பொங்கல் விடுமுறைக்கு பின்னர் பயோ மெட்ரிக் கருவிகள் பொருத்தப்படும் என்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..