மூன்று ஆண்டிற்கும் மேலாக ஒரே இடத்தில் பணியாற்றும் அரசு அலுவலர்கள், பணியாளர்களை துறை வாரியாக வேறு இடங்களுக்கு மாற்ற தேர்தல் கமிஷன் உத்தரவிட்டதை அடுத்து ,மாவட்டத்தில் அதற்கான ஆய்வுப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.








லோக்சபா தேர்தலுக்கான முதற்கட்ட பணிகள் துவங்கப்பட்டுள்ளன. அதன்படி கலெக்டர்கள் ஓட்டு எண்ணிக்கை மையங்களை ஆய்வு செய்கின்றனர். வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.இந்நிலையில் தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளுக்குமேல் பணிபுரிந்திருந்தால் அந்த அலுவலர்கள், பணியாளர்களை வேறு இடங்களுக்கு மாற்றி அதற்கான பட்டியலை மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்க தேர்தல் கமிஷன் அறிவுறுத்தி உள்ளது. 'தேனி மாவட்டத்தில் தற்போது அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது,' என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துஉள்ளது

Whats App Group link