சம்பளம் அதிகம் தா! என
எங்கேனும் ஒற்றைக்குரல் கேட்டீரா?

ஊதியக்குழு அறிவித்த
ஊதியம் தா என்னும் குரல்தானே கேட்கிறது.

5 ஆண்டுகள் மட்டுமே
ஆட்சியில் இருப்போருக்கு ஓய்வூதியம் ஏன் என்றா கேட்டோம்.

58 வயதுவரை பணியாற்றும்
எங்களுக்கு ஏன் இல்லை ஓய்வூதியம் என்றுதானே கேட்கிறோம்.

கணக்கில் காட்டாத உங்கள் சொத்தைப்பற்றியா கேட்டோம்?

21 மாதமாக தரப்படாமல் இருக்கும்
எங்கள் ஊதியத்தைத்தானே கேட்டோம்!

சாப்பிடாத இட்டலிக்கு
ஒன்னரைக் கோடி எப்படி கணக்கெழுதினாய் என்றா கேட்டோம்?

எங்களது ஊதியத்தில் பிடித்த
ஐம்பதாயிரம் கோடி எங்கே என்றுதானே கேட்கிறோம்.

பத்தாம் வகுப்பைக் கூட
தாண்டாத நீங்கள்
ஐ.ஏ.எஸ் அதிகாரிகளையும் ஆளலாம்.
ஆனால்
நாங்களோ பட்டங்கள் பல பெற்றாலும் பால்வாடிக்கு பாடம் நடத்த செல்ல வேண்டுமா?

உங்களுக்கு தெரியுமா?
குழந்தைகளோடு இருப்பது சொர்க்கத்தில் வசிப்பது போன்றது.

தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் தானே என்று
ஏளனமாய் நினைக்கிறீரா?

அம்மாவுக்குப் பிறகு உன்மீது அன்பு காட்டிய
இன்னொரு அன்னை.

அப்பாவுக்குப் பிறகு
உன்மீது அக்கறை செலுத்திய இன்னொரு தந்தை..

ஆசிரியர் போராட்டத்தை
பக்கம் பக்கமாய் எழுதிக் கொச்சைப்படுத்தும்
சில ஊடக நண்பர்களுக்கு..

உங்களுக்கு
பேனா பிடிக்கச் சொல்லிக்கொடுத்ததும்
ஓர் ஆசிரியர்தான்..

ஆசிரியரின் வலியை
நீங்கள் உணராமல் எழுதுவதில் இருந்தே, உங்கள் கற்றலை அறியமுடிகிறது..

எல்கேஜி வேண்டாம் என சொல்லவில்லை..
அதற்கென தனியே ஆசிரியர்களை நியமனம் செய் என்றுதான் சொல்கிறோம்.

அங்கன்வாடிகள் மட்டுமே
தமிழுக்கான தாய்வீடாய் இருந்தது.
இனி அதுவும் ஆங்கில வகுப்புக்கான டியூசன் சென்டர் தான்..

பள்ளிகளை இணைக்கிறோம் என்கிறார்கள்..
பணியிடங்களை மூடுகிறோம் எனச் சொல்லாமல்,

பணியிடங்கள் பறிபோவது குறித்த அக்கறையில்லை
வேலையில்லா பட்டதாரிகளுக்கு...

நியாயமாகப் பார்த்தால்
அவர்கள்தான் போராட்டத்தில் முன்னே நிற்க வேண்டும்..

ஏன் தெரியுமா?
பணியிடங்களைக் குறைக்காதே!
அங்கன்வாடிகளை மூடாதே!
ஓய்வூதியம் வேண்டும்.
சம ஊதியம் கொடு..
இவையேல்லாம்
வருங்கால அரசு ஊழியர்களுக்கான கோரிக்கை..

அரை ஊதியம் கொடு
வேலைக்கு வருகிறேன் என
பைத்தியக்காரன் கூட செய்ய மாட்டேன்..

உரிமைக்காகப் போராடுபவனின்
உயிர்குடிக்கத் துணியும் உனக்கு எப்படி நல்லவை நடக்கும்..

வீட்டில் ஆளில்லை என்றால்
வீட்டின் உரிமையாளர் ஆகிவிடுவாயா?

உனக்கு
திருமணம் செய்ய ஆசை என்றால்,
ஒரு பெண்ணைப் பார்த்து
மணமுடிக்க வேண்டும்.
அடுத்தவன் மனைவியைப் பார்த்து ஆசைப்படக்கூடாது..

பணிவேண்டுவோரின்
கனிவான கவனத்திற்கு
வேலை வேண்டுமெனில்
அரசிடம் போராடு!
அடுத்தவரின் வாழ்க்கையோடு அல்ல.

இது
ஊதியத்திற்கான போராட்டமல்ல..
உரிமைக்கான போராட்டம்.

*ஆதவன்*