இன்று கள்ளக்குறிச்சி மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1947 ஆகஸ்ட் மாதம் இந்திய விடுதலை பெற்ற பின்னர், பிரித்தானிய இந்தியாவின் சென்னை மாகாணமானது சென்னை மாநிலம் என பெயர்மாற்றம் செய்யப்பட்டது.

1953 முதல் 1956 வரையிலான மாநில எல்லைகள் சீரமைப்புகளின் வாயிலாக தற்போதைய எல்லைகள் உருவாக்கப்பட்டன.
சென்னை மாநிலமானது, 1969ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாக தமிழ்நாடு என மறுபெயரிடப்பட்டது.

முந்தைய சென்னை மாகாணமானது 13 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டிருந்தது. அவையாவன:
செங்கல்பட்டு,
கோயம்புத்தூர்,
கன்னியாகுமரி,
மெட்ராஸ்,
மதுரை,
நீலகிரி,
வட ஆற்காடு,
இராமநாதபுரம்,
சேலம்,
தென் ஆற்காடு,
தஞ்சாவூர்,
திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி ஆகியனவாகும்.

இம்மாவட்டங்கள் கீழ்க்காணும் வகையில் பிரிக்கப்பட்டு தற்போதைய புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.

1966: சேலம் மாவட்டத்தைப் பிரித்து தருமபுரி மாவட்டம் உருவாக்கப்பட்டது.

1974: திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைப்  பிரித்து புதுக்கோட்டை மாவட்டம்  உருவாக்கப்பட்டது.

1979: கோயம்புத்தூர் மாவட்டத்தைப் பிரித்து ஈரோடு மாவட்டம் உருவாக்கப்பட்டது.

1985: மதுரை மற்றும் இராமநாதபுரம்  மாவட்டங்களைப் பிரித்து புதிதாக சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.

1985: மதுரை மாவட்டத்தைப் பிரித்து திண்டுக்கல் மாவட்டம் உருவாக்கப்பட்டது.

1986: திருநெல்வேலி மாவட்டத்தைப் பிரித்து தூத்துக்குடி மாவட்டம் உருவாக்கப்பட்டது.

1989: வட ஆற்காடு மாவட்டத்தைப் பிரித்து புதிதாக வேலூர், திருவண்ணாமலை  மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.

1991: தஞ்சாவூர் மாவட்டத்தைப் பிரித்து புதிதாக நாகப்பட்டினம், திருவாரூர்  மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.

1993: தென் ஆற்காடு மாவட்டம், புதிதாக விழுப்புரம், கடலூர் ஆகிய இரு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது.

1995: திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைப்  பிரித்து புதிதாக கரூர், பெரம்பலூர்  மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.

1996: மதுரை மாவட்டத்தைப் பிரித்து புதிதாக தேனி மாவட்டம் உருவாக்கப்பட்டது.

1997: சேலம் மாவட்டத்தைப் பிரித்து புதிதாக நாமக்கல் மாவட்டம் உருவாக்கப்பட்டது.

1997: முந்தைய செங்கல்பட்டு மாவட்டமானது, காஞ்சிபுரம், திருவள்ளூர்  ஆகிய இரு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது.

2004: தர்மபுரி மாவட்டத்திலிருந்து புதிதாக கிருட்டிணகிரி மாவட்டம் உருவாக்கப்பட்டது.

2007: பெரம்பலூர் மாவட்டத்தைப் பிரித்து புதிதாக அரியலூர் மாவட்டம்  உருவாக்கப்பட்டது.

2009: கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு  மாவட்டங்களிலிருந்து சில பகுதிகள் பிரிக்கப்பட்டு புதிதாக திருப்பூர் மாவட்டம்  உருவாக்கப்பட்டது.

2019: விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து கள்ளக்குறிச்சி உருவாகிறது.