தமிழகத்தில் போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் தமது உத்தரவில், ஆசிரியர்கள் தங்களது போராட்டத்தை கை விட்டு, வெள்ளிக்கிழமைக்குள் பணியில் சேர வேண்டும் என, கூறியுள்ளார். மேலும், உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும், பணிக்கு வராத ஆசிரியர்களுக்கு தலைமை செயலாளர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பள்ளிகள் எந்த தடையும் இன்றி செயல்பட போதுமான நடவடிக்கையை எடுக்கவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார்