திருக்குறள்
அதிகாரம்:செய்ந்நன்றியறிதல்
திருக்குறள்:104
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.
விளக்கம்:
ஒருவன் தினையளவாகிய உதவியைச் செய்த போதிலும் அதன் பயனை ஆராய்கின்றவர், அதனையே பனையளவாகக் கொண்டு போற்றுவர்.
பழமொழி
Lamb at home and a lion at the cage
பார்த்தால் பசு பாய்ந்தால் புலி
இரண்டொழுக்க பண்பாடு
1.பிறரைக் குறித்து அநாகரீகமான வார்த்தைகளை உபயோகிக்க மாட்டேன்
2. தினமும் ஒரு முறையாவது என்னாலான உதவியை செய்வேன்
பொன்மொழி
தண்டனை கொடுப்பதற்கு தாமதம் செய். ஆனால், மன்னிப்பு கொடுப்பதற்கு யோசனை கூட செய்யாதே.
அன்னைத்தெரசா
பொதுஅறிவு
1.சித்தூர்கார் கோட்டை எங்குள்ளது?
ராஜஸ்தான்
2. குவாலியர் கோட்டை எங்கு உள்ளது?
மத்திய பிரதேசம்
தினம் ஒரு பாரம்பரிய உணவுப் பொருளின் மகத்துவம்
முள்ளங்கி
1. முள்ளங்கியைச் சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் போது, மாவுச் சத்து நன்றாக செரிமானம் ஆகிவிடும். கொழுப்புச் சத்தும் நன்றாக ஜீரணமாகும். தவிர ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புகள் சேர்வதை முள்ளங்கி தடுக்கும்.
2. முள்ளங்கிச் சாறு மூல நோயைக் குணப்படுத்தும். சிறுநீரக கற்கள் பிரச்னையில் அவதிப்படுபவர்களுக்கு முள்ளங்கி முழு நிவாரணம் தரும். முள்ளங்கியை நன்றாக வேக வைத்து, அந்த நீரை வடிகட்டிக் குடித்து வர சிறுநீரக கற்கள் முற்றிலும் கரைந்து போகும்.
English words and meaning
Javelin. ஈட்டி
Jester. விகடன் Jury. பஞ்சாயத்துகுழு
Jot. சிறு அளவு
Jovial. மகிழ்ச்சியான
அறிவியல் விந்தைகள்
சில புரட்சிகள் அறிவோம்
1. முட்டை உற்பத்தி அதிகரிப்பு - வெள்ளி புரட்சி
2. பால் உற்பத்தி அதிகரிப்பு - வெண்மை புரட்சி
3. வேளாண் பொருட்கள் உற்பத்தி அதிகரிப்பு - பசுமை புரட்சி
4. கடல் சார் பொருட்கள் உற்பத்தி அதிகரிப்பு - நீல புரட்சி
5. பழங்கள் மற்றும் தேன் உற்பத்தி அதிகரிப்பு - தங்கப் புரட்சி
நீதிக்கதை
நீ எந்தக் காகம்?
பலராம் பிழைப்பதற்கு வழியின்றித் தவித்தான். என்ன செய்வதென்று தெரியவில்லை....ஒரு நாள் அறிவுமதி என்ற அறிஞரைச் சந்தித்தான். அவரிடம் தன் கஷ்டங்கைச் சொன்னான்.
எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டார் அறிவுமதி. அவர் பலராமிடம், ""இந்த பூமி பரந்து விரிந்து கிடக்கிறது....இந்த ஊரில் உனக்கு வேலை கிடைக்கவில்லை என்றால் வெளியூர் சென்று வேலை தேடு...உன் முயற்சிக்கு ஏற்ப இறைவன் கூலி தருவான்...''
பலராமும் சம்மதித்துப் புறப்பட்ட மூன்றாம் நாள் ஊருக்குத் திரும்பினான்.
ஊருக்குத் திரும்பியவன், அறிவுமதியைச் சந்தித்தான்.
அவரிடம், ""தங்கள் அறிவுரைப்படி நான் கிளம்பிவிட்டேன்.....வழியில் பாலைவனம்!....ஒரே ஒரு மரம் மட்டும் தென்பட்டது....கடுமையான வெயிலில் நடந்து களைத்துப் போய் அந்த மர நிழலில் அமர்ந்தேன்....அந்த மரத்தில் சிறகொடிந்த ஒரு நொண்டிக்காகம் பசியால் துடித்துக் கொண்டிருந்தது...அப்போது எங்கிருந்தோ பறந்து வந்த இன்னொரு காகம், தான் கொண்டு வந்த உணவை இந்த நொண்டிக் காக்கைக்கு ஊட்டி விட்டுச் சென்றது! எங்கோ பாலைவனத்தில் பசியால் கிடந்து துடிக்கும் ஒரு நொண்டிக்காக்கைக்கு மற்றொரு காகத்தின் மூலம் உணவை அளிக்கும் இறைவன், என்னை மட்டும் கை விட்டு விடுவானா....என்ற எண்ணம் எனக்குள் தோன்றியது!....திரும்பி வந்து விட்டேன்!...'' என்றான்.
அறிவுமதி சிரித்துக் கொண்டே, ""அது சரி!....நீ அதில் எந்தக் காகம்?'' என்று கேட்டார்.
""ஐயா, நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?''
""யாராவது உணவு தருவார்களா,....என்று பரிதவிக்கும் நொண்டிக் காகமா?....அல்லது .....பாடுபட்டு உணவு தேடி தானும் உண்டு பிறருக்கும் வழங்கும் வலிமை உள்ள காகமா?...நீ எந்தக் காகமாக இருக்கு விரும்புகிறாய்?''
இப்போது நம்பிக்கையோடு உற்சாகமும் பலராமுக்கு ஏற்பட்டு விட்டது.
தற்போது அவன் வறுமை நீங்கி சந்தோஷமாக இருக்கிறான்!
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..