*இன்று (09.02.2019) முதல் ஆசிரியர்களின் வருகையை TN Schoools செயலி மூலம் அனைத்து அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தங்கள் கைபேசியிலிருந்து பதிவு செய்ய உள்ளோம்.
*ஆசிரியர் வருகைப் பதிவு செயலியில் பதிவு செய்யும் வருகை, விடுப்பு விவரங்கள், எந்த வகையான விடுப்பு, Absent போன்ற அனைத்தும் e-Sr உடன் ஒருங்கிணைக்கப்பட உள்ளன.*
*ஆகவே ஆசிரியர்களின் விடுப்பை பதிவு செய்யும் போது கவனமாக இருக்கவும்.*
*ஒரு முறை பதிவு செய்து விட்டால் மாற்றவே முடியாது.*
*தவறுதலாக ஒரு ஆசிரியருக்கு absent என பதிவு செய்து விட்டால், அவருக்கு ஒரு நாள் ஊதியப் பிடித்தம் செய்ய நேரிடும் சூழல் ஏற்படும்.
*அதே போல தவறுதலாக EL என பதிவிட்டால், அவருடைய சேமிப்பில் உள்ள EL ல் ஒரு நாள் கழிக்க நேரிடும் என்பதால் மிக கவனமாக செயல்பட வேண்டும்.
*பதிவு செய்யும் இடம், நேரம், தேதி ஆகியவை உயர் அலுவலர்களுக்கு தெரியும் என்பதால் பள்ளியிலிருந்து மட்டுமே பதிவிட வேண்டும்.
*காலை 9.10 மணிக்குள் ஆசிரியர் வருகையை பதிவு செய்ய வேண்டும் என கூறப்படுகிறது.
*ஒரு ஆசிரியர் முற்பகல் மட்டும் தற்செயல் விடுப்பு எடுத்து, பிற்பகல் பள்ளிக்கு வந்தால், பிற்பகல் வருகையை பதிவு செய்ய தற்போதைய செயலியில் வசதியில்லை.
*பள்ளிக்கு வராத ஆசிரியருக்கு, வந்ததாக தலைமை ஆசிரியர் பதிவு செய்தால், அதற்கான பின் விளைவுகளுக்கு தலைமை ஆசிரியர் மட்டுமே பொறுப்பேற்க நேரிடும் என்பதால், உண்மைத் தகவல்களை உள்ளீடு செய்வதே சிறந்தது.
நன்றி லாரன்ஸ்
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..