தமிழகத்தில், மேல்நிலை வகுப்பு பொதுத்தேர்வுக்கு, 10 கி.மீ.,க்கு மேல், எந்த தேர்வு மையங்களும் இல்லை,'' என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.ஈரோடு மாவட்டம், கோபியில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

முதல்வரின் ஒப்புதலுக்கு பின், நம் நாடே வியக்கும் வகையில், 1.50 கோடி மரக்கன்றுகள், மாணவர்கள் மூலம் நடப்பட்டு, பராமரிக்கப்படும்.

 தமிழகத்தில், மேல்நிலை வகுப்பு அரசு பொதுத்தேர்வுக்கு, புதிதாக, 750 தேர்வு மையங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. இதற்கு முன், 25 கி.மீ., துாரத்தில், தேர்வு மையங்கள் இருந்தன.

 தற்போது, 10 கி.மீ., துாரத்துக்கு மேல், தமிழகத்தில் எந்த தேர்வு மையங்களும் இல்லை. பர்கூர் மலைப்பகுதியில், கடைக்கோடியில் வசிக்கும் மாணவர்கள் வசதிக்காக, தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

 கேள்வித்தாள் முறை, விடைகளுக்கு மதிப்பெண் வழங்கும் முறை விபரங்கள், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்