🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
*ஜாக்டோ ஜியோ வழக்கில் இன்று 18.02.2019 மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நடந்த வழக்கின் முழு விபரம்*
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
*ஆசிரியப் பெருமக்களுக்கு இரவு வணக்கம்*
1⃣ *இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தமிழகத்தில் உள்ள ஆசிரியர் இயக்கங்கள் மற்றும் மருத்துவத் துறையில் உள்ள இயக்கங்கள் சேவைத்துறையில் வருவதால் இயக்கங்கள் செயல்படுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும்...!!*
2⃣ *ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்றும் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது*
3⃣ *ஓய்வு பெற்றவர்கள் இயக்கப் பணியில் ஈடுபடக் கூடாது என்றும் பொது நலன் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.*
*அதன்பேரில் ஜாக்டோ ஜியோ சார்பான நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது விசாரணையின் பொழுது அரசு தரப்பில் ஒரு ரூபாய் வருமானத்தில் 71 பைசாவிற்கு ஊதியத்திற்காக செலவிடுகின்றோம் என்றும் மேலும் சில வாதங்களையும் முன் வைத்தனர் _( உண்மையான செலவு 40% மட்டுமே)_ நீதியரசர்கள் அது குறித்து சில கேள்விகளை எழுப்பி கருத்துக்களை வினவினார்*
*நமது தரப்பு வழக்கறிஞர் cps என்ற திட்டத்தில் தமிழகத்தில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மிக கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளனர். அவர்களுக்கு ஓய்வுபெற்ற போதும் இறப்பின் போதும் எந்த ஒரு பலனும் ஏற்படவில்லை என்ற காரணத்தினால் தான் இந்த போராட்டங்களை முன்னெடுத்தனர் என நமது தரப்பு வாதத்தை விட்டார்கள்.*
☹☹☹☹☹☹☹☹☹☹☹
*அதிலும் குறிப்பாக இடைநிலை ஆசிரியர்களுக்கு 2009 க்கு பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்காமல் மாநிலத்தில் பணிபுரியும் சக இடைநிலை ஆசிரியர்களின் ஊதியத்தை வழங்காமல் இழைக்கப்பட்ட அநீதியை மிகவும் விரிவாகவே தெள்ளத்தெளிவாக விளக்கினார்.*
👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼
😔😔😔😔😔😔😔😔😔😔😔
*கடைநிலை ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை தான் தமிழகத்தில் உள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு 10 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது அதனை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் விடுமுறை நாட்களில் நடத்தப்பட்டது கடந்த போராட்டங்களின்போது அரசு எழுத்துப்பூர்வமான உத்தரவாதம் அளித்தது, அந்த எழுத்துபூர்வமான உத்தரவாதத்தை நிறைவேற்றாத காரணத்தினால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு எண்-WP-28558/2017 தொடுக்கப்பட்டு அந்த வழக்கின் இடைக்கால உத்தரவில் அரசு எழுதிக்கொடுத்த உத்தரவாதத்தை தாண்டி எதுவும் செய்ய முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால ஆணையை பிறப்பித்தது அதனையும் அரசு செவிமடுக்கவில்லை இது போன்ற காரணத்தினால்தான் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது என்று நீதிமன்றத்தில் தெளிவாக எடுத்துரைத்தார் நீதியரசர்கள் கோரிக்கைகளை கேட்டுவிட்டு இவர்கள் தரப்பில் நியாயம் உள்ளது ஆனாலும் மாணவர்களின் நலன் கருதி அவர்கள் போராட்டத்தை தவிர்த்திருக்க வேண்டும் என்ற கருத்தையும் பதிவிட்டு விட்டு கோரிக்கைகளை எழுத்துப்பூர்வமாக பதிவு செய்யும் பட்சத்தில் அதற்கான ஆணை பிறப்பிக்க எதுவாக இருக்கும் என்றும் வழக்கு விசாரணையை வரும் திங்கட்கிழமை 25.2.2019 அன்று ஒத்தி வைத்துள்ளனர். ஊடகங்களில் பல்வேறு தவறான செய்திகள் ஒளிபரப்பாகின்றன நமது தரப்பு சார்பாக பேசப்பட்ட நியாயமான செய்திகள் வெளியே வருவதில்லை நமக்கு எதிராக உள்ள செய்திகள் மட்டுமே அதிகமாக வெளியே வருகின்றன நண்பர்கள் அதை புறக்கணிக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.*
🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣
செய்திப்பகிர்வு
*மாநில தலைமை*
*2009&TET ஆசிரியர்கள் போராட்ட குழு*
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..