*🔶🔶தேர்தல் பணியில் ஈடுபடுபவர்களை மிரட்டக்கூடாது என அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வலியுறுத்தி உள்ளனர்*

*🔶🔶தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 18-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. தேர்தல் பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது*

*🔶🔶தேர்தல் பணியில் ஈடுபடுபவர்களுக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் இரண்டு கட்ட பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட தேர்தல் பணியில் ஈடுபட உள்ளவர்கள் தயாராக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது*

*🌀🌀சட்டப்படி நடவடிக்கை*

*🔶🔶இதுகுறித்து ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கூறியதாவது*

*🔶🔶தேர்தல் தொடர்பான பயிற்சி வகுப்புகள் காலையில் தொடங்கி மாலை வரை நடக்கும். இதற்கு வரும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு பயணப்படி, சாப்பாடு வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது*

*🔶🔶அதேபோல் வசிக்கும் இடத்தை விட்டு வெகு தூரத்தில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு பணி நியமிக்கப்படுகிறது*

*🔶🔶இதனால் பெண் ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இரவே சென்று தங்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படுகிறது. அவ்வாறு செல்பவர்களுக்கு போதிய வசதிகள் செய்து தரப்பட வேண்டும்*

*🔶🔶தேர்தல் பணிக்கு வர மறுப்பவர்கள் மீது மக்கள் பிரதிநிதித்துவம் சட்டம் 1951-ன் படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டப்படுகிறது. இதுபோன்ற போக்கை கைவிட்டு ஆரோக்கியமாக பணியாற்றும் சூழலை ஏற்படுத்தி தர வேண்டும்*

🔶🔶இவ்வாறு அவர்கள் கூறினர்*