தேசிய ஒரு செடி வளர்ப்பு நாள் (மார்ச்-12) க்காக திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும்  கிரீன் நீடா சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் திரு. இராஜவேலு அவர்களிடமிருந்து பெற்ற மரக்கன்றை எங்கள் திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் மேலகண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முதல் வகுப்பு படிக்கும் மாண்புமிகு மாணவன் ரூபனின் மரம் வளர்ப்புச் சேவையை ஊக்கப்படுத்தும் விதமாக, அவன் அன்புடன் வைத்த கோரிக்கைக்கு இணங்க, வாதாம் மரக்கன்றை வழங்கியதை ஆய்வு செய்யும் பொருட்டு அவனது வீட்டிற்கு நேரில் சென்று பார்த்ததில் மட்டற்ற மகிழ்ச்சி எனக்கு ஏற்பட்டது. செடிகளின் மீது தீராத நேசம் கொண்ட அவனது உயர்ந்த உள்ளத்தை அவனது தாயார் பெருமையுடன் எடுத்துக் கூறியது பெரும் வியப்பாக இருந்தது.

Join Whats App Group Link -Click Here



Join Telegram Group Link -Click Here