திருக்குறள்


அதிகாரம்:தீவினையச்சம்

திருக்குறள்:204

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு.

விளக்கம்:

பிறனுக்கு கேட்டைத் தரும் தீய செயல்களை ஒருவன் மறந்தும் கூட எண்ணக்கூடாது, எண்ணினால் எண்ணியவனுக்கு கேடு விளையுமாறு அறம் எண்ணும்.

பழமொழி

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது

Don't measure the worth of a person by their size or shape.

இரண்டொழுக்க பண்புகள்

1.பயணம் செய்யும் போது தேவை படுவோருக்கு எழுந்து இடம் கொடுப்பேன்
2. நீரை மிக சிக்கனமாக உபயோகிப்பது மட்டும் அல்ல அதை சேமிக்கவும் முயல்வேன்

பொன்மொழி

நண்பனுக்காக உயிரைக் கொடுப்பது என்பது எளிது; ஆனால், உயிரைக் கொடுப்பதற்குரிய நண்பன் கிடைப்பது அரிது.

     - கதே

 பொது அறிவு

1.நாடாளுமன்ற கட்டிடத்தை வடிவமைத்தவர்கள் யார் ?

சர் எட்வின் லுத்தியன்ஸ் மற்றும் சர் எர்பர்ட் பேக்கர்.

2. தென்னாட்டு ஜான்சிராணி என்று அழைக்கப்பட்டவர் யார்?

 அஞ்சலை அம்மாள்

சிப்ஸ் என்னும் நஞ்சுபெட்டிக்கடை, மளிகைக்கடை, கார்ப்பரேட் உணவகம், ஆபீஸ் கேன்டீன் என எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது சிப்ஸ். இதில்தான் எத்தனை வெரைட்டீஸ்! சரி. இது உடலுக்கு நல்லதா என்றால், `இல்லை' என்பதுதான் மருத்துவம் சொல்லும் அழுத்தமான பதில்.

1. "எண்ணெயில் தயாரிக்கப்படும் எல்லா உணவுகளுமே, உடலுக்குக் கேடு தரும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அந்தப் புரிதலை மீறி, ஒருவரை ஓர் உணவு ஈர்க்கிறது அல்லது கவர்கிறது என்றால், அதற்கு அதன் சுவைதான் முக்கியக் காரணம். இப்படி சுவைக்கு அடிமையாகவைக்கும் ஒரு ஸ்நாக்ஸில் கார்போஹைட்ரேட்ஸ், கொழுப்புச்சத்து, சோடியம் என்ற மூன்று வகை சத்துகள் மட்டுமே இருக்கின்றன. இவையும்கூட, குறிப்பிட்ட அளவுக்கு மேல் உட்கொண்டால் உடலின் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை அதிகரித்து, உடல் உபாதைகளை ஏற்படுத்துபவை.

2. எண்ணெயிலுள்ள கொழுப்புச்சத்துகளை, ட்ரான்ஸ் ஃபேட் எனப்படும் கெட்ட கொழுப்பாக மாற்றிவிடும். ட்ரான்ஸ் ஃபேட், ரத்தத்தில் கெட்ட கொழுப்பின் அளவை அதிகரித்து இதய அடைப்பு, பக்கவாதம் போன்ற உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது.

3. கார்ப்பரேட் நிறுவனங்கள் தயாரிக்கும்சிப்ஸ் பாக்கெட்களில், ட்ரான்ஸ் ஃபேட் அளவு வெளிப்படையாக குறிப்பிடப்பட்டிருக்கிறதே என சிலர் நினைக்கலாம். அதன் உண்மைத் தன்மை, பல நேரங்களில் கேள்விக்குறியாகவே இருக்கிறது.
சிப்ஸ்களில் சேர்க்கப்படும் உப்பின் சுவை, சாப்பிடுபவரை மீண்டும் மீண்டும் ஈர்க்கும் தன்மை கொண்டது. அளவுக்கதிகமாக உப்பு உட்கொள்வது ரத்த அழுத்தம், எலும்புப்புரை, சிறுநீரகப் பிரச்னைகள் போன்றவற்றையும் ஏற்படுத்தக்கூடும்.

English words and Meaning

Scout.  வேவுக்காரன்,
ஒற்றன்
Scrap.   சிறு துண்டு
Limekiln. சுண்ணாம்பு காளவாய்
Gossip.  வீண்பேச்சு
Esteem.  பெருமதிப்பு, வெகுமதி

அறிவியல் விந்தைகள்

நுண்ணுயிரி
*நுண்ணுயிரி என அழைக்கப்படுபவை வெற்றுக்கண்ணுக்குப் தெளிவாகப் புலப்படாத, நுண்ணோக்கியின் உதவியால் மட்டுமே பார்க்கக் கூடிய  உயிரினங்கள் ஆகும்.
*. இதைப்பற்றிய படிப்பு நுண்ணுயிரியல் என அழைக்கப்படுகிறது.
*இவ்வுயிர்களில் பாக்டீரியாக்கள், பூஞ்சைகள், நுண்பாசிகள் , ஒட்டுண்ணி ஆகியன அடங்கும்.
* நுண்ணுயிர்கள் இவ்வுலகம் முழுதும் காணப்படுகின்றன. அவை இல்லாத இடங்கள் உலகில் அரிது எனலாம்
* இவை நன்மை செய்யும் நுண்ணுயிர்கள், தீமை செய்யும் நுண்ணுயிரிகள் என இரு வகையாக பிரிக்கலாம்.

Some important  abbreviations for students

* NASA    -   National Aeronautics and Space Administration (of the U.S.A.)

* NATO    -   North Atlantic Treaty Organisation

நீதிக்கதை

பிறந்த நாள் பரிசு
மன்னர் கிருஷ்ணதேவராயருக்குப் பிறந்தநாள் விழா. நகரமெல்லாம் தோரணம், வீடெல்லாம் அலங்காரம்! மக்கள் தங்கள் பிறந்த நாள் போல மன்னரின் பிறந்த நாளை மகிழ்ச்சியோடு கொண்டாடினர்.

முதல்நாள் இரவே வீதிகள் தோறும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள், வாண வேடிக்கைகள், அரண்மனையில் வெளிநாடுகளிலிருந்து வந்த தும்துவர்களுக்கு விருந்து ஏகதடபுடலாக நடந்தது.

மறுநாள் அரச சபையில் அரசருக்கு மரியாதை செலுத்துதல் நடந்தது. முதலில் வெளிநாடுகளிலிருந்து வந்த அரசப் பிரதானிகள், தங்கள் நாட்டு மன்னர்கள் அனுப்பிய பரிசுகளைத் தந்தனர்.

பிறகு அரசப் பிரதானிகள், பொதுமக்கள், மன்னருக்கு பரிசளித்து மரியாதை செலுத்தினார்கள். அதன்பிறகு அரசரின் நெருங்கிய நண்பர்கள் தங்கள் பரிசுகளை அளித்தனர். அப்போதுதான் பெரியதொரு பொட்டலத்துடன் தெனாலிராமன் உள்ளே நுழைந்தான். அரசர் உள்பட எல்லாரும் வியப்போடு பார்த்தனர்.

மற்றவர்களிடம் பரிசுகளை வாங்கித் தன் அருகே வைத்த மன்னர், தெனாலிராமன் கொண்டு வந்த பரிசுப் பொட்டலம் மிகப் பெரிதாக இருந்ததால் அவையிலுள்ளவர்கள் ஆவலோடு என்ன பரிசு என்று பார்த்ததால் அந்தப் பொட்டலத்தைப் பிரிக்கும்படி தெனாலிராமனிடம் கூறினார் அரசர்.

தெனாலிராமன் தயங்காமல் பொட்டலத்தைப் பிரித்தான். பிரித்துக் கொண்டே இருந்தான். பிரிக்கப் பிரிக்கத் தாழைமடல்கள் காலடியில் சேர்ந்தனவே தவிர பரிசுப் பொருள் என்னவென்று தெரியவில்லை.

அதனால் எல்லாரும் ஆவலுடன் கவனித்தனர். கடைசியில் மிகச்சிறிய பொட்டலமாக இருந்ததைப் பிரித்தான். அதற்குள் நன்றாகப் பழுத்துக் காய்ந்த புளியம்பழம் ஒன்றிருந்தது.

அவையினர் கேலியாகச் சிரித்தனர்.

அரசர் கையமர்த்திச் சிரிப்பு அடங்கியவுடன், “”தெனாலிராமன் கொடுத்த பரிசு சிறிதாக இருக்கலாம். அதற்கு அவன் கொடுக்கப் போகும் விளக்கம் பெரிதாக இருக்கலாமல்லவா?” என்று அவையினரைப் பார்த்துக் கூறிவிட்டு தெனாலிராமன் பக்கம் திரும்பி, “”ராமா இந்த சிறிய பொருளைத் தேர்ந்தெடுத்ததின் காரணம் என்ன?” எனக் கேட்டார்.

“”அரசே, ஒரு நாட்டை ஆளும் மன்னர் எப்படி இருக்க வேண்டும் என்ற தத்துவத்தை விளக்கும் பழம் புளியம்பழம் ஒன்று தான். மன்னராக இருப்பவர் உலகம் என்ற புளிய மரத்தில் காய்க்கும் பழத்தைப் போன்றவர். அவர் பழத்தின் சுவையைப் போல இனிமையானவராக இருக்க வேண்டும்.

“”அதே நேரத்தில் ஆசாபாசங்கள் என்ற புளியம்பழ ஓட்டில் ஒட்டாமலும் இருக்க வேண்டும் என்பதை விளக்கவே இந்த புளியம்பழத்தைப் பரிசாகக் கொண்டு வந்தேன். புளியம்பழமும் ஓடும்போல இருங்கள்!” என்றான்.

அவையினர் கைதட்டி ஆரவாரம் செய்தனர். மன்னர் கண்கள் பனிக்க ஆசனத்தைவிட்டு எழுந்து தெனாலிராமனைத் தழுவி, “”ராமா எனக்குச் சரியான புத்தி புகட்டினாய். ஒரு பிறந்த நாள் விழாவிற்கு இத்தனை ஆடம்பரம் தேவையில்லை.

“”பொக்கிஷப் பணமும் பொது மக்கள் பணமும் வீணாகும்படி செய்து விட்டேன். உடனே விசேடங்களை நிறுத்துங்கள். இனி என் பிறந்தநாளன்று கோயில்களில் மட்டுமே அர்ச்சனை ஆராதனை செய்யப்பட வேண்டும். அவசியமில்லாமல் பணத்தை ஆடம்பரமாகச் செலவு செய்யக்கூடாது,” என உத்தரவிட்டார்.

தெனாலிராமனின் துணிச்சலையும் சாதுரியத்தையும் எல்லாரும் பாராட்டினர்.

அரசர் தனக்கு வந்த பரிசுப் பொருள்களில் விலை உயர்ந்தவற்றைத் எடுத்து தெனாலிராமனுக்குப் பரிசாகத் தந்தார்.

இன்றைய செய்திகள்

09.04.2019

* சேலம்-சென்னை 8 வழிச்சாலை தொடர்பான தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.8 வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தியதும் செல்லாது என ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு.

* தமிழகத்தில் 75 மையங்களில் நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி தொடங்கியது: பயிற்சியாளர்கள் பற்றாக்குறையால் 338 மையங்கள் முடக்கம்.

* உலக வங்கியின் புதிய தலைவராக டேவிட் மால்பாஸ் ஒருமனதாக தேர்வு: அதிபர் டிரம்ப்புக்கு நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

* மெக்சிகோவில் நடைபெற்று வரும் அபியர்டோ ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் விளையாட, நடப்பு சாம்பியன் கார்பினி முகுருசா (ஸ்பெயின்) தகுதி பெற்றார்.

* 73 வயதில் தொழில்பூர்வ கால்பந்து போட்டியில் கோல்  கீப்பிங் :  ‘இரும்பு’ முதியவர் ஐசக் ஹயீக் உலக சாதனை.

Today's Headlines

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

🌸The Chennai High Court has ordered the cancellation of the order of Government of Tamil Nadu regarding Salem-Chennai 8 waytrack highway

🌸Free training for NEET Examination in 75 centers started: 338 centers have been frozen because of lack trainers.

🌸David Malpas unanimously selected as the new Chairman of the World Bank: It is noteworthy that he is close to President Trump.

🌸The current champion Carbini Muguruza (Spain) qualifies for the women's singles event at the Abeirdo Open tennis tournament in Mexico.

🌸At the age of 73, soccer football tournament  goal keeper: 'Iron' elderlu Isaac Heike made world record.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
🎊Have a best day🎊

Prepared by
Covai women ICT_போதிமரம்