*(விரிவான செய்தி)*
*🔵🔵ஆசிரியர் பயிற்சி பட்டயப் படிப்பு தேர்வு விடைத்தாள் திருத்துவதில் மெகா மோசடி நடந்ததாக எழுந்த புகாரை அடுத்து 250 விரிவுரையாளர்களிடம் விசாரணை நடத்த தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.*
*🔵🔵தமிழகத்தில் இயங்கும் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள், தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் ஆகியவற்றில் ஆசிரியர் பட்டயப் படிப்பு (டிடிஎட்) மாணவ- மாணவியருக்கான நடப்பு கல்வி ஆண்டுத் தேர்வுகள் கடந்த ஜூன் மாதம் நடந்தது. இந்த தேர்வில் முதல் ஆண்டு மாணவர்கள் 5,091, இரண்டாம் ஆண்டு மாணவர்கள் 6,539, மற்றும் தனித் தேர்வர்கள் 5,420 பேர் என மொத்தம் 17 ஆயிரத்து 50 பேர் பங்கேற்றனர். இவர்கள் எழுதிய விடைத்தாள் திருத்தும் பணிகள் கடந்த 2018 ஆகஸ்ட் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் முடிந்தது.*
*🔵🔵இதற்கான தேர்வு முடிவுகள் கடந்த மாதம் முதல் வாரத்தில் வெளியானது. அதில் அனைத்து மாணவர்களுக்கு தலா 50 மதிப்பெண்கள் போடப்பட்டு இருந்தது.*
*🔵🔵இதனால் அந்த மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக கருதப்படும். இதில் சந்தேகம் இருப்பதாக சிலர் கேள்வி எழுப்பியதுடன், தேர்வுத்துறைக்கு புகார்களும் கொடுத்துள்ளனர். இந்த புகாரின் பேரில், விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்ட 250 விரிவுரையாளர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்துக்கு, தேர்வுத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.*
*🔵🔵இதையடுத்து, மாவட்ட அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம், தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் ஆகியவற்றில் பணியாற்றும் விரிவுரையாளர்கள் மீது விசாரணை நடத்த மாநில ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.*
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..