1. காலை *9.30* மணிக்குத் தேர்தல் பணிமனைக்குச் செல்லவும்.

2. தேர்தல் தொடர்பான *இறுதி அறிவுரைகளைக்* கேளுங்கள். ஐயங்களைத் தீர்த்துக் கொள்ளவும்.

3. மண்டல அலுவலரின் *அலைபேசி எண்ணைப்* பெறவும்.

4. உங்கள் வாக்குச்சாவடியின் *இருப்பிடம்*, *வழி*, *அலுவலர்கள்* போன்றவற்றை உங்கள் *தனிப்பட்ட நாட் குறிப்பில்* குறித்துக் கொள்ளவும்.

5. இயன்றால், அலுவலர்கள் *இணைந்து*, வாக்குச்சாவடி செல்லவும்.

6. வாக்குச்சாவடி செல்ல, *போக்குவரத்து வசதி* செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

7. இருப்பினும், தனிப்பட்ட வாகனங்களில் செல்வது *நலம்*.

8. வாகனங்களில் *காற்று*, *எரிபொருள்* போன்றவற்றைச் சரிபார்க்கவும்.

9. வாக்குச்சாவடியை அடைந்ததும், உள்ளூர் *VAO* , *RI* போன்றோரைச் சந்தித்து, *தளவாடங்களின் அளவு*, *விளக்குகள்*, *கழிப்பிட வசதி*, *பாதுகாப்பு*, போன்றவைகளைச் சரிபார்க்கவும்.

10. அவர்களது *அலைபேசி எண்களைச்* சேகரிக்கவும்.

11. இரவு உணவு, தேர்தல் நாளன்று, உணவு, தேநீர் வழங்குதல் பற்றியும், அதற்கான *முன் பணம்*, வழங்க வேண்டிய *நேரம்* பற்றி, உறுதியாகக் கூறவும்.

12. அலுவலர்கள் உள்ளுர் கட்சி முகவர்களின்  வருகைக்குப் பின், அவர்களுக்கான *தெளிவான நெறிமுறைகள்* பற்றிக் கூறி, அவர்களது *அலைபேசி எண்களை*, நட்புணர்வோடு பெறுங்கள்.

13. மண்டல அலுவலர் வந்த பின், பொருட்களைச் *சரிபார்த்து*, வாங்கவும்.

14. *புதிய உத்தரவுகள்*, *மாறுதல்கள்* ஏதேனும் உள்ளனவா என்று அறிந்து கொள்ளுங்கள்.

15. *தேர்தல் செயலி* மூலம், தளவாடங்கள் பெற்றுக் கொண்டமைக்கு *ஒப்புகைத் தகவல்* அனுப்பவும்.

16. சிறிது ஓய்வுக்குப் பின், அலுவலர் மேசைகள், முகவர்களுக்கான *பெஞ்சுகள்*, *இயந்திரங்களுக்கான இடங்களைத்* தேர்வு செய்து, அவற்றைச் *சரியாக* அமைக்கவும்.

17. வாக்காளர் எளிதில் வந்து செல்லும் வண்ணம், முகப்புக் கதவின் குறுக்கே, *கயிற்றால்* பிரிக்கவும். (அமைத்து விட்டு, இரவில் அவிழ்த்து விடவும்)

18. *இரவில் எந்திரங்களை இயக்கிப் பார்க்க,அனுமதி இல்லை*. எனவே *முயற்சிக்க வேண்டாம்*.

19. எந்திரங்களை மண்டல அலுவலர் அனுமதித்தால், *இரவே*, சரியான இடங்களில் *அமைத்து விடவும்*.

20. அலுவலர்கள் ஒன்றாக அமர்ந்து, தேர்தல் நாளன்று செய்ய வேண்டிய நடைமுறைகளைத் *தெளிவாகத்* *திட்டமிடவும்*.

21. அனைவரும் *தெளிவாகச் செயல் படவும்*, *ஐயங்கள் தீரவும்* இது உதவும்.காற்று வீசாத, வாக்காளர் கண்களில் படுமிடங்களில் *இரவே, போஸ்டர்களை அனைவரும் சேர்ந்து, ஒட்டி விடவும்*.

22. இயன்றவரை, இரவு உணவு முடித்து, *10 மணிக்குள் உறங்கச் செல்லவும்*. (உறக்கம் வந்தால்...)

23. காலையில், *4.30* மணிக்கு எழுந்து, *தயாராக இருங்கள்*.

24. *முகவர்களின் வருகை, 5.30 க்குள்* இருந்தால் நலம்.

25. அவர்களது , *சான்றிதழ்களைச்* *சரிபார்த்து*, அவர்களுக்கான *நுழைவுச் சீட்டுகளை* வழங்கவும்.

26. மாதிரி வாக்குப்பதிவுக்குத் தயாராகி, இயன்றவரை *6.30* *மணிக்குள்* முடித்து, சற்று ஆசுவாசப்படுத்திக் கொள்ளுங்கள்.

27. மாதிரி வாக்குப்பதிவுச் சான்றிதழ்களை நிரப்பி, *கையெழுத்துப் பெறுங்கள்*.

28. *செய்தி அனுப்பவும்*.

29. *சரியாக 7 மணிக்கு* வாக்குப்பதிவைத் தொடங்குங்கள்.

30. *செய்தி அனுப்பவும்*.

31. வாக்குப்பதிவு எண்ணிக்கையை முறையாக, உங்கள் தனிப்பட்ட நாட் குறிப்பில் குறித்து, *1 மணி* *நேரத்திற்கு ஒரு முறை* குறிக்கவும்.

32. செயலி மூலம், அவ்வப்போது விவரங்களை அனுப்ப இது *உதவிகரமாக* இருக்கும்.

33. *முகவர்களின் இருப்பை*, அவ்வப்போது சரிபார்த்து அறிவுரை வழங்கவும்.

34. அவர்களிடம் *அலைபேசி* *இல்லை* என்பதை, காவலர் மூலம் உறுதிப்படுத்திக் கொண்டே இருங்கள்.

35. வாக்காளர்கள் *கூட்டம் சேராமல்*, *பதட்டம் அடையாமல்*, ஒரே வேகத்தில், வாக்குப்பதிவு நடக்கட்டும்.

36. குறிப்பிட்ட கால இடைவெளிகளில், கூட்டம் குறைவான நேரத்தில், மாறி, மாறி *உணவருந்தச் செல்லவும்*.

37. *4 மணிக்குப் பின்* முகவர்கள் வெளியில் செல்ல *அனுமதி இல்லை* என்பதை, அவர்களுக்கு, முன்கூட்டியே மீண்டும் *நினைவு* *படுத்துங்கள்*.

38. *6 மணிக்கு*, சாவடியின் *கேட்டை மூடி*, நிற்கும் வாக்காளர்களுக்கு, கடைசியிலிருந்து, 1, 2 என வரிசை எண் இட்ட, *presiding officer* கையெழுத்திட்ட, *டோக்கன்களை*
காவலர் உதவியுடன் வழங்கவும்.

39. வாக்குப்பதிவு முடிந்ததும், பதிவேடு, எந்திரம் காட்டும் *எண்ணிக்கையை ஒப்பிடுங்கள்*.
(சரியாகவே இருக்கும்)

40. எந்திரங்களை, *முகவர்கள்* *முன்னிலையில்,சீலிடவும்*.

41. அவர்களுக்கான, *சான்றிதழ்களை வழங்கவும்*. படிவங்கள் போதவில்லை என்றால், படிவங்களை *நகல் எடுத்து வரச் சொல்லுங்கள்*.

42. எக்காரணம் கொண்டும், *நிரப்பிய படிவங்களை நகல் எடுக்கக் கொடுக்காதீர்கள்*.

43. மண்டல அலுவலரின் *அறிவுரையைக் கேட்டு*, VVPAT இன் மின்கலத்தைப் பிரிக்கவும்.

44. பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களைக் கையெழுத்திட்டு, பிற அலுவலர்களிடம் தந்து, *சரி பாருங்கள்*.

45. *பதிவேடுகளின் இறுதியில்*, *அதன் முடிப்பை எழுதிக்* *கையெழுத்திடவும்*.

46. எல்லாக் கவர்களையும், பிரித்து *அடுக்கி வைக்கவும்*.

47. சீலிட வேண்டியவற்றிற்கு *மட்டும்*, ஒட்டி, சீலிடவும்.

48. மண்டல அலுவலர் வந்ததும், முறையாக *ஒப்படைத்து, ஒப்புகை* *பெறவும்*.

49. உழைப்பூதியம் பெற்று, அலுவலர்களுக்கு *மகிழ்ச்சியுடனும்*, மன நிறைவுடனும் வழங்கி, *முகமலர்ச்சியுடனும்*, *நட்புணர்வுடனும் நன்றி கூறுங்கள்*.

50. இரவு உணவை முடித்து, புறப்பாடு பற்றிச் *சிந்திக்கவும்*. வீடு, தொலைவு எனில் சாவடியில் *தங்கிக்* *காலையில் செல்லவும்*. முடிந்தால் அலுவலர்கள் அனைவரும் *ஒன்றாகப் புறப்படுங்கள்*, நாட்டுப் பணியாற்றிய *வெற்றி வீரர்களாய்*, பாதுகாப்பாய்...

Join Whats App Group Link -Click Here



Join Telegram Group Link -Click Here