*எம்.இ, எம்.டெக் படிப்புக்கான பொது நுழைவுத்தேர்வை நடத்த அண்ணா பல்கலைக்கழகம் மறுப்பு தெரிவித்துள்ளது. பி.இ, பி.டெக் படிப்புக்கான நுழைவுத்தேர்வை நடத்த அண்ணா பல்கலைக்கழகம் ஏற்கனவே மறுப்பு தெரிவித்திருந்தது*

*இதையடுத்து பி.இ, பி.டெக் நுழைவுத்தேர்வை இந்த ஆண்டு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் நடத்துகிறது. தமிழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கையை கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வந்தது*

*இந்த நிலையில், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை மையத்தின் இணை தலைவராக விவேகானந்தனை நியமித்தது. இவர் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் இயக்குனராக உள்ளார்*

*விவேகானந்தனின் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு மாணவர் சேர்க்கை மையத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து, துணை வேந்தர் சூரப்பா ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகம் இந்த ஆண்டு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வினை மேற்கொள்ளாது என்று தெரிவித்தார்*

*இதையடுத்து இந்த ஆண்டு பி.இ, பி.டெக் நுழைவுத்தேர்வை நடத்துவதற்கான பணிகளில் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் ஈடுபட்டுள்ளது*

*இந்த நிலையில் எம்.இ., எம்.டெக் படிப்புகளுக்கான டான்கா எனப்படும் தமிழ்நாடு காமன் அட்மிஸ்ஸின்ஸ் நுழைவுத் தேர்வையும், அதேபோல் எம்.சி.ஏ., மற்றும் எம்.பி.ஏ., படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வையும் அண்ணாபல்கலைக்கழகம் நடத்தாதது என்று தெரிவித்திருக்கின்றனர்*

*அதில் உறுப்பு கல்லூரிகளுக்கு மட்டும் நுழைவு தேர்வினை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது*

*பி.இ., பி.டெக்., படிப்புகளை தொடர்ந்து எம்.இ., எம்.டெக்., எம்.சி.ஏ பட்டபடிப்புகளுக்கும் தற்போது கலந்தாய்வினை நடத்தப்போவதியில்லை என உறுதிபட தெரிவித்துள்ளது. இதனால் இந்த படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு மற்றும் கலந்தாய்வு பணிகளை தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது