புதுக்கோட்டை,ஏப்.4: புதுக்கோட்டை ஒன்றியம் தைலாநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கல்விச் சீர் மற்றும் கல்விக் கண்காட்சி நடைபெற்றது.

விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் பள்ளித் தலைமையாசிரியர் உஷாராணி வரவேற்றுப் பேசினார்.புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எஸ்.ராகவன் கொண்டு கண்காட்சியினை தொடங்கி வைத்து பார்வையிட்டு வாழ்த்திப் பேசினார்.ஆசிரியர் மன்ற மாநில துணைச் செயலாளர் மன்றம் நா.சண்முகநாதன்,வட்டாரக்கல்வி அலுவலர் கருணாகரன்,வட்டாரவளமைய மேற்பார்வையாளர் தேவி,வட்டார வள மைய பயிற்றுநர் ரெங்கராஜன் ,முன்னாள் ஆசிரியர் மன்ற மாவட்டச் செயலாளர் கண்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

விழாவில் ஊர்ப்பொதுமக்கள் அனைவரும்  எல்.இ.டிவி,பீரோ,நாற்காலி,மைக்,கேரம்போர்டு,சேர் என பல்வேறு பள்ளிக்கு தேவையான பொருள்களை பள்ளிக்கு கல்விச் சீராக கொண்டு வந்தனர்.அதனை பள்ளித் தலைமைஆசிரியர் உஷாராணி பெற்றுக்கொண்டார்.பின்னர் மாணவர்கள் சார்பில் பள்ளியில் நடத்தப்பட்ட கல்விக் கண்காட்சியினை ஊர்ப்பொதுமக்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் பார்வையிட்டு மாணவர்களை வாழ்த்திச் சென்றனர்.

விழாவில் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் செல்வராஜன்,செல்வராசு, முன்னாள் ஊராட்சித் தலைவர் அசோக் பாண்டியன் மற்றும் கோமதி சங்கர் ,மதியழகன்,அழகுசுந்தரம்,நூர்முகம்மது,ஆறுமுகம்,சந்திரன்,நைனாமுகம்மது மற்றும் ஆசிரியர்மன்ற பொறுப்பாளர் வெங்கடேசன் ஊர்ப்பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் மைதிலி,ஞானம்பாள்,சம்பூரணம்,லதா,ஜெயகலா,மதுசூதனன் ஆகியோர் செய்திருந்தனர்.


Join Whats App Group Link -Click HereJoin Telegram Group Link -Click Here