கோடை கால விடுமுறையில்மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி நடப்பது குறித்து, பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "மாணவர்களின் நலன்கருதி கோடை விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தக்கூடாது என்று கடந்தாண்டு அறிவுறுத்தப்பட்டது. தற்போது கோடை விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளை பள்ளிகளில் நடத்துவதாக புகார்கள் வருகின்றன.
கோடையில் வெயில் அளவு அதிகரித்துள்ளதால், மாணவர்களுக்கு வெப்பம் சார்ந்த நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அவர்களுக்கு கட்டாயம் ஓய்வளிக்க வேண்டும்
கோடை விடுமுறை என்பது மாணவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று தங்கள் உறவினர்களோடு பழகவும், உறவுகளின் அவசியத்தை தெரிந்துகொள்ளவும், உறவுகளை மேம்படுத்தவும் ஒரு நல்ல வாய்ப்பு ஆகும். இதனால் மாணவர்களின் வாழ்வியலில் விழுமியம் ஏற்படும்.
எனவே மாணவர்களின் நலன்கருதி கோடை விடுமுறை நாட்களில் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தக்கூடாது என்று பள்ளிகளுக்கு திட்டவட்டமாக தெரிவித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இதுதொடர்பாக பெற்றோரிடம் இருந்து பள்ளிகள் மீது புகார் வந்தால், அதன்மீது எவ்வித காலதாமதமின்றி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்." என அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..