பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

திருக்குறள்:164

அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக்கு அறிந்து.

உரை:

பொறாமைப்படுதலாகிய தவறான நெறியில் துன்பம் ஏற்படுத‌ை அறிந்து, பொறாமை காரணமாக அறமல்லாதவைகளைச் செய்யார் அறிவுடையோர்.

பழமொழி :

A little pot is soon hot

சிறிய பானை சீக்கிரம் சூடாகும்

பொன்மொழி:

மனிதனை மனிதனாக்குபவை உதவிகளும் வசதிகளுமல்ல. இடையூறுகளும் துன்பங்களுமே.

-மாத்யூஸ்

இரண்டொழுக்க பண்பாடு :

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

பொது அறிவு :

1.ஏவுகணையைக் கண்டுபிடித்தவர்?
வெர்னர் வான் பிரவுன்

2.எந்திர பீரங்கியைக் கண்டுபிடித்தவர்?
ஜேம்ஸ் பக்கிள்

நீதிக்கதை :

நாயும் அதன் நிழலும்
The Dog and His Shadow Moral Story in Tamil



முட்டாள் நாய் ஒன்று ஒரு இறைச்சிக் கடையில் இருந்த எலும்புத்துண்டை திருடியது. அதனை வாயில் கவ்விக்கொண்டு தன் இருப்பிடத்திற்குப் புறப்பட்டது.

செல்லும் வழியில் சில நாய்குட்டிகள் அந்த முட்டாள் நாயிடம், “எலும்புத்துண்டை தறுமாறு” கேட்டன. ஆனால் அந்த முட்டாள் நாயோ “இதை நான் யாருக்கும் தரமாட்டேன். இதை முழுவதுமாக நான் மட்டுமே சாப்பிட போகிறேன்”, என்று கூறி விட்டுச்சென்றது.

செல்லும் வழியில் ஒரு பாலத்தை வேண்டியிருந்தது. நாய் பாலத்தைக் கடக்கும் போது கீழே தண்ணீரைப் பார்த்தது. அந்தத் தண்ணீரில் அதன் உருவம் தெரிந்தது. தண்ணீரில் தெரிந்த அதன் உருவத்திலும் வாயில் எலும்புத்துண்டு இருந்தது.

அதைக் கண்ட நாய் “இந்த நாயிடமும் ஒரு எலும்புத்துண்டு உள்ளது. இதையும் அபகரித்துவிட வேண்டும்” என்று நினைத்தது. உடனே அது பலமாக 'லொள்','லொள்' எனக் குரைத்து கொண்டே தண்ணீரில் தெரிந்த நாயின் மீது பாய்ந்தது.

அதனால் அதன் வாயில் இருந்த எலும்புத்துண்டும் தண்ணீரில் விழுந்தது. தண்ணீரில் விழுந்தவுடன் தான் அந்த முட்டாள் நாய்க்கு புரிந்தது இது நிழல் பிம்பம் என்று.

அதனைத் தேடிச் சென்ற நாய் தண்ணீரில் தத்தளித்தது. மிகவும் துன்பத்துடன் உயிரக் காப்பாற்றிக் கொண்டால் போதும் என கரையேற வேண்டியதாயிற்று.

நீதி: பேராசை பெரு நஷ்டம்

இன்றைய செய்தி துளிகள் : 

1) அரசு பள்ளிகளில் முன்னதாகவே தொடங்கிய மாணவர் சேர்க்கை

2) நீட் தேர்வை எதிர்க்கும் மாநிலங்களில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் - காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!

3) தேர்தல் பயிற்சிக்கு வராத அரசு ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்ய பரிந்துரை.

4) நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று முதல் அடுத்த இரு நாட்களுக்கு அனல் காற்று வீசும்: வானிலை மையம் எச்சரிக்கை

5) தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் பதவிக்கு இந்திய கிரிக்கெட்டின் பெருஞ்சுவர் 'ராகுல் திராவிட்'நியமனம்


Join Whats App Group Link -Click Here



Join Telegram Group Link -Click Here