*2019-20 கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் 10,12-ம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டத்தின் கீழ் அச்சடிக்கப்பட்ட பாடப்புத்தகங்களின் விற்பனை தொடங்கப்பட்டது*

*பழைய பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டு புதிய பாடத்திட்டத்தின் கீழ் புத்தகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன*

*1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கு கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், 10,12 வகுப்புகளுக்கும் பாடப் புத்தகம் விற்பனை, தனியார் பள்ளிகள், தேவையான புத்தகங்களை பதிவு செய்து பெறலாம் என பாடநூல் கழகம் அறிவித்துள்ளது. மேலும் 12-ம் வகுப்பில் தாவரவியல், விலங்கியலுக்கு ஒரே புத்தகம் தான் எனவும் பாடநூல் கழகம் தகவல் தெரிவித்துள்ளது*

*60% புத்தகங்கள் பள்ளிகளில் இலவசமாக வழங்கப்படும்; 40% புத்தகங்கள் விற்பனைக்கு அனுப்பப்படும். 2,3,4,5 மற்றும் 7-ம் வகுப்புகளுக்காக புதிய பாட புத்தகங்கள் சில நாட்களில் விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது*

*க்யூ.ஆர். குறியீடு, பொது அறிவுத் தகவல்கள் என பல்வேறு புதிய விஷயங்களுடன் வடிவமைக்கப்பட்ட இந்தப் பாடத்திட்டம் கல்வியாளர்கள், பெற்றோர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது*