அங்கன்வாடி மையங்களில் இயங்கும் எல்.கே.ஜி., யு.கே.ஜி., பள்ளிகளின் ஆசிரியர், மாணவர் விபரத்தையும் கல்வி தகவல் மேலாண்மை (எமிஸ்) இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும், என கல்வித்துறை அறிவுறுத்துகிறது.
தமிழக அரசின் பள்ளிக்கல்வி நிர்வாகத்தை இணையதளம் வழியே ஒருங்கிணைக்கும் முயற்சியில் அரசு செயலர் பிரதீப் யாதவ் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதன்படி கல்வி தகவல் மேலாண்மை இணையதளம் வழியே அனைத்து பள்ளிகளின் ஆசிரியர், மாணவர்கள் விபரங்களை சேகரித்து, ஆசிரியர் பணி மாறுதல் கவுன்சிலிங், மாணவர்களுக்கான நலத்திட்டங்களை இந்த இணையதளம் வழியே உண்மை தன்மையை கண்டறிந்து செயல்படுத்த உள்ளனர்.
ஆசிரியர், கல்வித்துறை அலுவலரின் வருகையும் ஜூன் முதல் பயோமெட்ரிக்' முறையில் பதிவு செய்யப்பட உள்ளது. தற்சமயம் அரசு மற்றும் உதவி பெறும் தொடக்க, உயர், மேல்நிலைப்பள்ளிகள் குறித்த விபரங்களை கல்வி தகவல் மேலாண்மை இணையதளத்தில் பதிவேற்றி வருகின்றனர். இத்திட்டத்தை அனைத்து பள்ளிகளிலும் விரைந்து முடிக்கும் விதமாக மாவட்டத்திற்கு ஒரு கண்காணிப்பு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர்கள் மே 18 ம் தேதி அந்தந்த மாவட்டங்களில் கல்வி தகவல் மேலாண்மை இணையதள பணிகளை ஆய்வு செய்வர்.அங்கன்வாடிக்கும் வருது 'எமிஸ்'கல்வி தகவல் மேலாண்மை இணையதளம் அடிப்படை கல்வியான அங்கன்வாடிக்கும் கொண்டுவரப்படும் என அரசு அறிவித்துள்ளது.
இதற்காக அரசு பள்ளிகளை போல், அரசு பள்ளிகளுடன் இணைந்து இயங்கும் 2 ஆயிரத்து 381 அங்கன்வாடி மையங்களில் நடக்கும் எல்.கே.ஜி., மற்றும் யு.கே.ஜி., பள்ளிகளில் பணிபுரியும் 402 ஆசிரியர்களின் பயோடேட்டா மற்றும் படிக்கும் மாணவர்களின் முழு விபரங்களை இணையதளத்தில் ஏற்ற வேண்டும் என கல்வித்துறை வலியுறுத்துகிறது.
அதன்படி அந்தந்த மாவட்டத்தில் பள்ளிகளுடன் இணைந்துள்ள அங்கன்வாடி மையங்களில் துவக்கப்பட்டுஉள்ள எல்.கே.ஜி., மற்றும் யு.கே.ஜி., பள்ளிகளின் மைய எண், ஆசிரியர் மற்றும் மாணவர் விபரங்களை முதன்மை கல்வி அலுவலர்கள் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..