அண்மையில் மே 10, 11, 12 தேதிகளில்  இராமேஸ்வரத்தில் கல்வியாளர்கள் சங்கமம் சார்பில் நடைபெற்ற இதனால் சகலமான(ண)வர்களுக்கும்...மாற்றங்களை விரும்பும் ஆசிரியர்களுக்கான பொதுமேடை கலாம் மண்ணில் ஒரு கனவுத் திருவிழாவில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகேயுள்ள மேலகண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகப் பணிபுரிந்து வரும் முனைவர் மணி.கணேசன் அவர்களின் கல்விச் சேவையை ஊக்குவிக்கும் வகையில் மாற்றங்களின் நாயகன் விருதினை தமிழ்நாடு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன தொழில்நுட்ப பிரிவு முதுநிலை விரிவுரையாளரும் தொழில்நுட்ப ஆசிரியர்களுக்கு நல்ல வழிகாட்டியுமான பேரா. ஆசீர் ஜூலியஸ் அவர்கள் வழங்கி கௌரவித்தார். கல்வியாளர்கள் சங்கம ஒருங்கிணைப்பாளர் சிகரம் சதீஷ் மற்றும் ஆசிரியர் மோ.கணேசன் ஆகியோர் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர். எல்லா புகழும் மாணவர்களுக்கே என்று இந்த விருதினை மாணவர்களுக்குச் சமர்ப்பிப்பதாக விருதாளர் மணி.கணேசன் மேடையில் நெகிழ்ச்சியுடன் தெரிவித்ததை அனைவரும் பாராட்டினர்.Join Whats App Group Link -Click HereJoin Telegram Group Link -Click Here