தமிழகத்தில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள், அலுவலர்களின் காலிப் பணியிடங்கள் குறித்து தெரிவிக்குமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்குப் பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தொடக்க கல்வி இயக்குநரகம் பிறப்பித்துள்ள உத்தரவில், அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர்கள் உபரியாக உள்ளதாகவும்,  பெரும்பாலான கல்வித் துறை அலுவலகங்களில் அலுவலர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. எனவே, கடந்த 2014-18-ஆம் ஆண்டு  வரையில் உள்ள உபரி ஆசிரியர் பணியிடங்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் பணியிடங்களை, மாவட்டகணக்கெடுத்து  முதன்மைக் கல்வி அலுவலர்கள் அனுப்பி வைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Join Whats App Group Link -Click Here



Join Telegram Group Link -Click Here