தமிழ்நாட்டில் 34 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளும், 5000 க்கும் மேற்பட்ட உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும் உள்ளன. தமிழக பள்ளிகளில் 35 மாணவர் களுக்கு ஒரு ஆசிரியர் வீதம் செயல்படுத்த பள்ளிக்கல்வி துறை அனுமதி அளித்துள்ளது. இப்படி இருந்தும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கை வெகுவாக குறைந்து வருகிறது. இதற்கு காரணம் ஆங்காங்கே பெருகி வரும் மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் தான்.
நகர்ப்புறங்களில் மட்டுமல்ல தற்போது கிராமப்புறங்களில் கூட இப்பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த தனியார் பள்ளி நிர்வாகம் தீவிர முயற்சி எடுத்து வருகின் றனர். அவர்களும் வீடுவீடாகச் சென்று பெற்றோர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இதனால் பெற்றோர்கள் தனியார் பள்ளிகளை நாடி செல்லக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அரசு பள்ளிகளில் ஏற்படும் விழிப்புணர்வு போதிய அளவில் மக்களுக்குப் போய் சேர வில்லை. இதனால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைய குறைந்து வருவதோடு மட்டு மல்லாமல் ஆசிரியர் பணியிடங்களும் நிரப்பப்படாமல் , அரசுப் பள்ளிகளை மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் சில அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வீடு வீடாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். மணமேல்குடி பகுதிகளில் பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வெகுவாக குறைந்து வருகிறது.
இப்பகுதிகளில் ஒருசில நடுநிலைப் பள்ளிகளில் 100க்கும் குறைவான மாணவர்களும், ஒரு சில தொடக்கப் பள்ளிகளில் 50க்கும் குறை வான மாணவர்களும் கல்வி பயின்று வருகின்றனர். அனைவருக்கும் கல்வித் திட்டம் 2009ன் படி ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனி ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும். ஆனால் ஒரு சில பகுதிகளில் குறைவான ஆசிரியர்களும் பணியில் உள்ளனர்.
இதுகுறித்து ஆசிரியர்கள் கூறும் போது: அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த ஆசிரியர்கள், ஒவ்வொரு வீடாக சென்று பெற்றோர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். வருடத்திற்கு நான்கு சீருடைகள், நோட்டு, பேனா, பென்சில், காலணிகள், மதிய உணவு, இலவச பஸ் பாஸ் போன்றவை அரசு இலவசமாக வழங்குகிறது. மேலும் பள்ளியில் நடைபெறும் விளையாட்டு போட்டி மற்றும் ஆண்டு விழாக்கள் போன்ற அரசு பள்ளியின் செயல்பாடுகளை பட்டியலிட்டு பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம் என்றனர்.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..