கோடை விடுமுறை முடிய, இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், பள்ளி வளாகங்களை துாய்மைப்படுத்த வேண்டும்' என, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக பாடத்திட்ட பள்ளிகளில், மார்ச்சில் பொது தேர்வுகள் முடிந்தன; ஏப்ரலில் பள்ளி இறுதி தேர்வுகள் நடந்தன. ஏப்., 12 முதல் கோடை விடுமுறை விடப்பட்டது.இன்னும் இரண்டு வாரங்களில், பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்நிலையில், அனைத்து பள்ளிகளுக்கும், பள்ளி கல்வித்துறை இயக்குனரகம் அனுப்பி உள்ள சுற்றறிக்கை:கோடை விடுமுறை முடிந்து, புதிய கல்வி ஆண்டில், பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன. அதற்கு முன், பள்ளிகளின் உள் கட்டமைப்பு வசதிகளை, சீர் செய்ய வேண்டும். அனைத்து பள்ளிகளிலும், பராமரிப்பு பணிகளுடன், சுத்தப்படுத்தும் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும்.பள்ளிகள் திறக்கப்படும் போது, மாணவர்களுக்கு உகந்த சூழலை பள்ளிகளில் ஏற்படுத்த வேண்டும். பள்ளிகள் திறக்கும் நாளில், மாணவர்களின் வகுப்புகள் துவங்கும் அளவுக்கு, அனைத்து முன் ஏற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..