தமிழ் வழி வினாத்தாள் சரியாக இருந்தது என்று மாணவர்கள் தெரிவித்தனர். அஜய் சந்தோஷ்(தனியார் பள்ளி, நாமக்கல்):என்னுடைய சொந்த ஊர் சிவகாசி. நான் நாமக்கல் எஸ்கேவி பள்ளியில் பிளஸ்2 முடித்துவிட்டு, கடந்த ஓராண்டாக சென்னையில் தனியார் நீட் கோச்சிங் சென்டரில் பயிற்சி பெற்றேன். 4 விருப்ப தேர்வு மையங்களை தேர்வு செய்ததில் நான் முதல் மையமாக சென்னையை தேர்வு செய்தேன். எனக்கு சென்னையிலேயே தேர்வு மையம் ஒதுக்கப்பட்டது.

தேர்வறைக்கு செல்லும்முன் மெட்டல் டிடெக்டரால் பரிசோதனை செய்தார்கள். ஒரு இயந்திரத்தில் என்னுடைய கைரேகையை பதிவு செய்து, கைரேகையை ஒப்பிட்டு பார்த்து உள்ளே அனுப்பினார்கள். பள்ளிப்படிப்பை முடித்தபின், என்சிஆர்டி பாடத்திட்டத்தில் பயிற்சி பெற்றதால் வினாத்தாள் எளிதாக இருந்தது.

தமிழ் வழியிலேயே நான் தேர்வு எழுதினேன். தமிழ் வினாத்தாள் சரியாக மொழிபெயர்க்கப்பட்டிருந்தது. என்சிஆர்டி பாடத்திட்டத்தை படித்ததால் எனக்கு வினாத்தாள் எளிதாக இருந்தது.

கார்த்திக்(சென்னை அரசு மேல்நிலைப்பள்ளி, திருவான்மியூர்):நான் கடந்த ஆண்டு பிளஸ்2 முடித்தபின், கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறேன். கடந்த முறை நீட் தேர்வில் அரசுக்கல்லூரியில் சேரும் அளவுக்கு மதிப்பெண் எடுக்க முடியவில்லை. நண்பர்கள் அளித்த நீட் தேர்வு பயிற்சி கையேடுகளை படித்தேன். மருத்துவர் ஆக வேண்டும் என்பதால் இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதினேன். எனக்கு வேதியியல் சார்ந்த கேள்விகள் எளிதாக இருந்தது.

அப்ரீன் பாத்திமா(அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கூடுவாஞ்சேரி): நான் படித்த பள்ளியிலேயே எனக்கு எங்களுக்கு நீட் கோச்சிங் கொடுத்தார்கள். என்சிஆர்டி பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் கேள்விகள் நேரடியாகவும் எளிதாகவும் இருந்ததாக சொன்னார்கள். ஆனால் அரசுப் பள்ளியில் படித்த எனக்கும் என்னுடைய தோழிகளுக்கும் கேள்வித்தாள் கடினமாக தான் இருந்தது. எங்களுக்கு நேரடி கேள்விகளாக இல்லாமல் பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது.

ஒரு கேள்விக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் ஒரே மாதிரியாக இருந்து குழப்பத்தை ஏற்படுத்தியது. வினாத்தாளில் இயற்பியல், வேதியியல் சார்ந்த கேள்விகள் கடினமானதாக இருந்தது. உயிரியல் சார்ந்த கேள்விகள் எளிதாக இருந்தது. அரசுப்பள்ளியில் இன்னும் சிறப்பாக கோச்சிங் கொடுக்கும்பட்சத்தில் இனி வரும் ஆண்டுகளில் அரசுப்பள்ளியில் படித்த மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

Join Whats App Group Link -Click HereJoin Telegram Group Link -Click Here