*இன்றைய திருக்குறள்*

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் 
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.

*மு.வ உரை*
ஒருவர் வாயிலிருந்து வரும் சொல் அன்பு கலந்ததாகவும், வஞ்சனையற்றதாகவும், வாய்மையுடையதாகவும் இருப்பின் அதுவே இன்சொல் எனப்படும்.

*கருணாநிதி  உரை*
அன்பு கலந்து வஞ்சம் அற்றவைகளாகிய சொற்கள், மெய்ப்பொருள் கண்டவர்களின் வாய்ச்சொற்கள் இன்சொற்களாகும்.

*சாலமன் பாப்பையா உரை*
அறம் அறிந்தவர் வாயிலிருந்து பிறந்து, அன்பு கலந்து உள்நோக்கம் இல்லாது வருவதே இனிய சொல்.

✡✡✡✡✡✡✡

*பொன்மொழி*

வெற்றி என்பது நிரந்தரமல்ல தோல்வி என்பது இறுதியானதுமல்ல! 

- பில் கேட்ஸ்

⚜⚜⚜⚜⚜⚜⚜

*Important Words*

Novelist நாவலாசிரியர்

Nurse செவிலியர்

Orator சொற்பொழிவாளர்

Painter சாயம் பூசுபவர், ஓவியர்

Palmist கை ரேகை நிபுணர்

🍀🌿☘🍀🌿☘☘☘

*இன்றைய மூலிகை*

*அருகம்புல்*

உடல் எடை குறைய, கொலாஸ்டிரல் குறைய, நரம்புத்தளர்ச்சி நீங்க, இரத்தப்புற்று குணமடைய அருகம்புல் ஒரு உலகப் புகழ்வாய்ந்த டானிக். இரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கச் செய்வதில் சிறந்தது அருகம் புல்தான். தோல் வியாதிகள் அனைத்தும் அருகம்புல்லில் நீங்கும். இரத்தத்தில் உள்ள விஷத்தன்மைகளை வெளியேற்றுவதில் திறமையானது. விநாயகர் கோயில்களில் அருகம்புல் கிடைக்கும்.

✍✍✍✍✍✍✍

*பொது அறிவு*

1. பிறந்தது முதல் இறப்பது வரை தூங்காத பிராணி எது ? 

*எறும்பு*

2. மிகச்சிறிய இதயம் கொண்ட பிராணி எது ? 

*சிங்கம்*

3. ராமகுண்டம் அணுமின் நிலையம் எந்த மாநிலத்தில் உள்ளது ? 

*ஆந்திரா*

4. அலிமினியத்தை கண்டறிந்தவர் யார் ? 

*ஹோலர்*

5. கால்நடை உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது? 

*இந்தியா*

6. தைராய்டு நோய்களை குணப்படுத்தும் உலோகம் எது? 

*டெலுரியம்*

✒✒✒✒✒✒✒

*நூலாசிரியர்- நூல்கள்*

1. சீவகசிந்தாமணி          –    திருக்கத்தேவர்

2. பெருங்கதை          –    கொங்குவேள்

3. குண்டலகேசி          –    நாதகுத்தனார்

4. சூளாமணி          –    தோலாமொழித்தேவர்.

🧬🧬🧬🧬🧬🧬🧬🧬
*Today's grammar*

*Interrogative Pronouns – கேள்வி சுட்டுப்பெயர்கள்*

இவை கேள்வி கேட்பதற்கு பயன்படுபவைகளாகும்.

Who - யார்
What - என்ன
Where - எங்கே
When - எப்பொழுது
Whom - யாரை
Which - எது
Whoever – யாரெவர்
Whomever - யாரெவரை
Whichever - எதுவாயினும்

உதாரணம்:

Where did you go?
நீ எங்கே போனாய்?

📫📫📫📫📫📫📫📫

*அறிவோம் இலக்கணம்*

*இடுகுறிப்பெயர்*

நம் முன்னோர்கள் எந்தக் காரணமும் கருதாமல் ஒரு பொருளுக்குக் குறியீடாக இட்ட பெயரே இடுகுறிப்பெயர்.
காரணம் அறியவியலாப் பெயர்கள் எல்லாம் இடுகுறிப்பெயர்களே.
மண், நாய், கோழி, மலை, காடு, மாடு என்பன இடுகுறிப்பெயர்களே

🗣🗣🗣🗣🗣🗣🗣🗣

*இன்றைய கதை*

*புதிர் கதை*

*பூக்களின் எண்ணிக்கை*

 மணி சில பூக்களை வாங்கிக் கொண்டு கோவிலுக்குச் சென்றான். ஒவ்வொரு கோவிலுக்குள்ளும் செல்வதற்கு முன்னால் குளத்தில் முழுகி எழுந்தான். என்ன ஆச்சர்யம்! அவன் கையில் இருந்த பூக்கள் இரு மடங்கானது. ஒவ்வொரு கோவிலிலும் 8 பூக்களை சமர்பித்தான். மூன்றாம் கோவிலை விட்டு வெளி வரும் போது அவன் கையில் பூக்கள் இல்லை. மணி வாங்கிய பூக்கள் எத்தனை?

*விடை*
மணி 7 பூக்கள் வாங்கினான். 

🧾🧾🧾🧾🧾🧾🧾🧾

*செய்திச் சுருக்கம்* 

🔮ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் கொண்டு வருவதற்கு தமிழக ரயில்வே ஒப்புதல் தெரிவித்துள்ளது.

🔮தமிழகத்துக்கு வரும் நல்ல திட்டங்களை எதிர்ப்பது ஏன் என ஐகோர்ட் கேள்வி.

🔮 ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் இலங்கை சிறையில் அடைப்பு, மீனவர்களை மீட்டுத்தருமாறு மத்திய மாநில அரசுகளுக்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

🔮 இந்தியா சரியான பாதையில்  சென்று கொண்டுள்ளது என்பதை மக்களவைத் தேர்தல் உணர்த்தியுள்ளது என ஜப்பானில் பிரதமர் மோடி உரை.

🔮குறைந்த போட்டிகளில் 20 ஆயிரம் ரன்களை எடுத்த வீரர் என்ற சாதனையை வீரட் கோலி பெற்றுள்ளார்.

☘🌿🍀🍀🌿☘🍀

*தொகுப்பு*

T.THENNARASU,
S.G.TEACHER,
TN DIGITAL TEAM,
THIRUVALLUR DT.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷



Join Whats App Group Link -Click Here



Join Telegram Group Link -Click Here