*♦♦ஜாக்டோ ஜியோ அமைப்பினரை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தரக்குறைவாக பேசி வருகிறார் என அந்த அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.*

*♦♦பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்துதல் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அண்மையில் தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் சங்கமான ஜாக்டோ ஜியோ அமைப்பினர் பெரும் போராட்டத்தை நடத்தினர்.*

*♦♦அரசு தரப்பு ஜாக்டோ ஜியோவின்  போராட்டத்தைக் கலைத்து பணிக்குத் திரும்புமாறு கூறியது.*

*♦♦இந்த நிலையில், ஜாக்டோ ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் உயர்மட்ட குழு கூட்டம் சென்னை திருவல்லிக்கேணியில் நடைபெற்றது.*

*♦♦அப்போது பேசிய ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி சுந்தரம், ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகக் கூறியே போராட்டத்தை வாபஸ் பெறச் செய்தது தமிழக அரசு.*

*♦♦இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஜாக்டோ ஜியோ அமைப்பினரை தரக்குறைவாக பேசி வருகிறார் என குற்றஞ்சாட்டி, இவ்விவகாரத்தில் முதலமைச்சர் நேரடியாக தலையிட்டு ஊழியர்களுக்கும், அரசுக்கும் இடையே இணக்கமான உறவை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.*

*♦♦மேலும், அரசு ஊழியர்கள் மீது பழி வாங்கும் வகையில் பணியிட மாற்றம் செய்யும் நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.*

*♦♦அதேசமயம், தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் தண்ணீர் தட்டுப்பாடு இல்லை என அரசு பொய் பிரசாரம் செய்கிறது என தெரிவித்துள்ளார்.*

*♦♦2500க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் தண்ணீர் தட்டுப்பாடு உள்ளது. மேலும், கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் 3-ல் திறக்கப்பட்டது.*

*♦♦இதுவரை மாணவர்களுக்கான புத்தகங்களை வழங்காமல், ஆசிரியர்களை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து பாடம் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.*

*♦♦உண்மையில், எத்தனை அரசு பள்ளிகளில் போதிய கணினிகள் வழங்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பியுள்ளார்.*

*♦♦இதற்கிடையில், ஜாக்டோ ஜியோவின் அடுத்தகட்டப் போராட்டம் என்பது அரசு கையில் உள்ளது.*

 *♦♦முதல்வர், அமைச்சர்களை சந்தித்து கோரிக்கைகளை அளிக்க உள்ளோம்.*

*♦♦அரசின் முடிவை பொறுத்தே அடுத்தகட்ட போராட்டம் குறித்து 15 நாளில் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.*


Join Whats App Group Link -Click Here



Join Telegram Group Link -Click Here